.

Sunday, April 1, 2007

சற்றுமுன்: அர்ஜுன் சிங் கார் மீது பாட்டில் வீச்சு

இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் கார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை செய்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதலாம் சுதந்திர போராட்டத்தின் (1857) 150வது ஆண்டு விழாவை யட்டி நேற்று கருத்தரங்கு நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் வந்தார். கருத்தரங்கில் அர்ஜுன்சிங் பேச தொடங்கியதும் 50 மாணவர்கள் எழுந்து அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். சமத்துவ இளைஞர்கள் என்ற அமைப்பை சேர்ந்த அவர்கள் கறுப்பு பாட்ஜ் அணிந்து இருந்தனர். “இடஒதுக்கீட்டை புகுத்தி மாணவர்களை பிரிக்காதே! அர்ஜுன்சிங்கே பதவியை ராஜினாமா செய்! என்று கோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சி முடிந்து அர்ஜுன்சிங் காரில் ஏறி புறப்பட்ட போது அதே மாணவர்கள் கார் முன் திரண்டு ரகளை செய்தனர். இந்த சம்பவம் பற்றி அர்ஜுன்சிங்கிடம் கேட்டதற்கு, இளைஞர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். அதே சமயம் நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சக்தியை இந்தியா பெற முடியும என்றார்.

தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...