.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: கண்துடைப்பு?- கருணாநிதி கண்டனம்

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கையாக இருந்து வருகிற இட ஒதுக்கீடு கொள்கைக்காக ஒரு அமைதி கிளர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்வதாக வேண்டுகோள் விடுத்து, அறிவிப்பு செய்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து, அது இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஏடுகளில் முதல் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியி லேயே அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையிலே பொது வேலை நிறுத்தத்தை வேலை நாளில் அறிவிக்காமல் விடுமுறைநாளான சனிக் கிழமை நடத்துவது ஏமாற்று வேலை என்கிறார். சேராத இடம் தனில் சேர்ந்ததால் எப் படி பட்ட நிலைக்கு அவர் ஆளாகி விட்டார்ப சமூக நீதி உணர்வு குருதியோடு ஓடு பவர்களுக்கு எதிர்ப்பினை எவ்வளவு விரைவிலே காட்டவேண்டும் என்பதில் தான் எண்ணம் செல்லும். சனிக்கிழமைகளில் ரெயில்கள் ஒடுவதில்லையாப

நம்மை அவ மானப்படுத்தினாலும் நாட்டு நலனுக்காக மானத்தைக்கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில் நாம் அனுப் பிய அழைப்பைக்கூட லட்சி யம் செய்யாதவர்களுக்கு இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன- ஆதிக்க புரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமக்கு சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு வாழுபவர் ஒன்றுகூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

கண்துடைப்பாம் கண் துடைப்பு! உடன்பிறப்பே இது கண்துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு! இந்தக் கண்ணீர் அடக்கமுடியாமல் அடித்தட்டு மக்கள் புழுக் களாய்த் தேரைகளாய் பொட் டுப்பூச்சிகளாய் மடிந்து போகாமல்-புரட்சிக்குரல் எழுப்ப எழுந்திடும் உரிமைப் போர்ப்படையின் மீது காரி உமிழ்வது போல இந்தப் பெண் மணியார் கண்துடைப்பு என் கிறாரே, இதுவும் நாம் எதிர் பார்த்தது தான் நாகத்திடம் நச்சுப்பல்லையும், இவர் போன்றோரிடம் நாச காலச் சொல்லையும் தானே எதிர் பார்க்க முடியும்


"மேலும் செய்திக்கு மாலை மலர்"

2 comments:

Anonymous said...

ஒரே ஒரு நாள் தாமதித்தாலும், ராமதாஸ் முந்தி விடுவார் எனும் அவசரத்தில் அழைக்கப்பட்டது தான் இந்த வேலை நிறுத்தம்.. சமூகநீதிக்காவலர் பட்டம் எங்கே தன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் ஒரு காரணம்...

முக்கிய பிரச்சனைகள், முல்லை பெரியார், காவிரி, துணைநகரம், விமானநிலய விரிவாக்கம், SEZ, இதிலெல்லாம் ஒரு அணுவை கூட அசைக்க முடியவில்லை.. முன்னுக்கு பின் முரணாக பேசிக்கொண்டு ராமதாஸுக்கு பயந்து கொண்டாவது, பதவியில் ஒட்டி இருக்க வேண்டிய கட்டாயம் இவருடய்து,,,

Anonymous said...

வெங்காயம்! அனைத்துமே அரசியல் நாடகம். மு.க அதில் கலைஞர் அவ்வளவு தான். அதில் ஜெ.ஜெ ஒரு வில்லி. சோ வசன கர்த்தா.


புள்ளிராஜா

-o❢o-

b r e a k i n g   n e w s...