.

Saturday, March 31, 2007

சற்றுமுன்:தமிழகம் முழுவதும் 2-ந் தேதி கோர்ட்டுகள் புறக்கணிப்பு :வக்கீல்கள் சங்கம் முடிவு

நேற்று காலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க கூட்டம், சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில், செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கண்டித்து ஏராளமான வக்கீல்கள் பேசினார்கள். இதன்பிறகு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 29-ந் தேதி இடைக்கால தடை விதித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக இயற்றிய இந்த சட்டத்திற்கு, ஓட்டு வங்கிக்காக இயற்றப்பட்ட சட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியிருப்பது வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

பெரும்பாலான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் இந்த நீதிமன்ற புறக்கணிப்பை கடைபிடித்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடப்படுகிறது.

- தினதந்தி

3 comments:

டண்டணக்கா said...

A welcome decision. Kudos TN lawyers. Bringing more hope.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

This is shameful.The clients will suffer for no fault of theirs.Advocates can show their protest in many other ways without
affecting the functioning of the
courts.

Anonymous said...

Kudos backward caste TN lawyers!

-o❢o-

b r e a k i n g   n e w s...