புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம்
இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
- தினமலர்
Saturday, March 31, 2007
சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி
Posted by சிவபாலன் at 4:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
7 comments:
இப்பத்தான் தினமலரில் இந்த சேதியைப் படிச்சுட்டு ஒரு பதிவு போடலாமுன்னு நினைச்சேன்.
இங்கே வந்து பார்த்தால் நீங்க அறிவிச்சு இருக்கீங்க.
அன்னாரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கணுமுன்னு பிரார்த்திக்கின்றேன்.
துளசி மேடம்
இவரது மரணம் நிச்சயம் இந்திய இசைக்கு ஒரு பெரிய இழப்பு.
//இவரது மரணம் நிச்சயம் இந்திய இசைக்கு ஒரு பெரிய இழப்பு.//
உண்மைதான் சிபா.
நமது அஞ்சலியை இப்பதிவின் மூலம் செலுத்துவோம்!
அவர் எழுதிய இசைக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது
அற்புதமாகத் தாக்கததுடன், உணர்வுடன் எழுதக்கூடியவர் அவர்!
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
SP.VR,சுப்பையா
migavum varuthamaana seithi. Avarin aanmaa saanthi adaiya ellam valla irivanai vendukirean
முன்பெல்லாம் சுப்புடு அரங்கில் இல்லையென்றாலும் வித்வான்கள் ஒரு ரசனையோடு பாடினார்கள். ஆனால் இன்று பாடுபவர்களுக்குப் பணம்தான் குறி. எத்தனை சுப்புடு இருந்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள். அவருடைய தைரியம் இனி யாருக்கும் வராது.
சகாதேவன்.
அன்னாரின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கணுமுன்னு பிரார்த்திக்கின்றேன்.
Post a Comment