.

Saturday, March 31, 2007

சற்றுமுன்: திருநங்கைகளும் மனிதர்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

தமிழக அரசு அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை அரசு மருத்துவனனைகளிலேயே செய்து கொள்ளலாம்.அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை மாநாட்டில் 'லிவிங் ஸ்மைல் வித்யாவால் வைக்கப் பட்ட கோரிக்கையும்,மதுரை உயர் நீதிமன்றத்தில்ல் 'சரவணன்' என்ற தன் பேரை லிவிங் ஸ்மைல் வித்யா' வாக மாற்ற போடப்பட்ட வழக்கும் அரசின் இந்த உத்தரவுக்கு காரணங்கள்.
தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன வித்யா சொன்னவை:பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்.இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.
நான் இதைச் செய்ய வேண்டி வடமாநிலங்களில் ஒருவருடம் பிச்சை எடுத்தேன்.இப்போது இந்த சிகிச்சையை இலவசமாக அரசு மருத்துவமானைகளில் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.ஒரு திருநங்கை பேங்க் அக்காவுன்ட்,டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை ,செல்போன் இணைப்புக் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.இந்த பிரச்சனைகள் தீரவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.அரசின் தற்போதைய உத்தரவில் பாலின அறுவைசிகிச்சையோடு வாய்ஸ் தெரபி,மார்பக வளர்ச்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் திருநங்கைகளும் மனிதர்கள் அவர்களை மதிப்போம் என்ற பிரச்சாரமும்,அவர்களின் பெற்றோருக்கு கவுன்ஸிலிங்கும் ,வீட்டைவிட்டுத் துரத்தும் பெற்றோருக்கு தண்டனையும் வழங்கப் பட வேண்டும். என்றும் கூறுகிறார் வித்யா

12 comments:

புதியவன் said...

தோழி லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் முயற்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Radha Sriram said...

நல்ல செய்தி!அவரோட முயற்சி வெற்றி பெற்றதற்க்கு வாழ்துக்கள் !!

மாசிலா said...

மிக நல்ல செய்தி.
தனி மனிதர் ஒருவரே தன் சொந்த முயற்சியால் இந்த அளவு பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருப்பது ஒரு சாதனையே!
வாழ்த்துக்கள். தொடர்ந்த வெற்றிக்கு மேலும் ஊக்கங்கள்.

SK said...

வாழும் புன்னகையின் இந்த வெற்றி பாராட்டுதற்குரியது.

தனி ஒரு மனிதராக அவர் செய்த இந்த சாதனை தமிழக வரலாற்றில் பதிக்கப்பட வேண்டும்.

இதே நேரத்தில் அவருக்கு ஒரு வேண்டுகோள்.

//இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.//

இப்போது இந்த அரசாணைக்குப் பிறகாவது, திருநங்கைகள் இதில் ஈடுபடாமல் இருக்க ஒரு இயக்கத்தை வித்யா தொடங்க வேண்டும்.

செய்வாரா?

இதற்கான என்னாலான முழு ஒத்துழைப்பையும் தர நான் தயார் என உறுதி கூறுகிறேன்.

சந்தோஷ் aka Santhosh said...

நல்ல விஷயம் தான் இது. கேட்க சந்தோசமா இருக்கு. எஸ்.கே சொல்லி இருப்பது மாதிரி வித்யா அவர்கள் இந்த முயற்சியை செய்தால் வலைபதிவர்கள் அனைவரும் தன்னால் ஆன உதவி செய்வார்கள். நானும் என்னால ஆன உதவி செய்கிறேன்.

துளசி கோபால் said...

நல்ல செய்தி.

நம்ம வித்யாவுக்கு வாழ்த்து(க்)கள்.

பொன்ஸ் said...

வழக்கமா எங்கிருந்து எடுத்து போட்டீங்கன்னு போடுவீங்களே.... காணலியே..

சிவபாலன் said...

பொன்ஸ்

ஒரு நண்பர் அனுப்பியது. அவரிடம் கேட்டுள்ளேன் சுட்டிக்கு..

கிடைத்தவுடன் இங்கே அப்டேட் செய்யப்படும்

நன்றி

நாமக்கல் சிபி said...

//நானும் என்னால ஆன உதவி செய்கிறேன்//

நானும் வழிமொழிகிறேன்!

அவரோட முயற்சிகள் மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்!

Anonymous said...

பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்

This is just to remove male sex organ.In other words this is
castration and may result in
death if not done properly.


Sex Reassignment Surgery
and treatment costs in lakhs and
is not generally available in
govt. hospitals.This surgery involves creation of artificial
female sex organs, hormone therapy
etc.It is done over many months.
Very few can afford it. This difference is not clear in this news item.

பொன்ஸ் said...

சிபா,
ஜூ.வி செய்தியின் பகுதி மாதிரி இருக்கிறது..

சிவபாலன் said...

பொன்ஸ் நீங்கள் சொல்வது சரி.

இச்செய்தி ஜீனியர் விகடன் வார இதழ் 04-04-07 இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி.

-o❢o-

b r e a k i n g   n e w s...