.

Sunday, May 20, 2007

ச: ரகசிய திட்டம்

சென்னை, மே 20:

சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில், விமானநிலையத்தையொட்டியுள்ள பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை அகற்ற முற்பட்டால், விமான போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட, விமான நிலைய ஊழியர்கள் ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்களின் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால் அந்த 2 விமான நிலையங்களுக்கு முன்னதாகவே விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணி மட்டும் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.


மேலும் அதிக விபரங்களுக்கு "மாலைச் சுடர்"

3 comments:

சிவபாலன் said...

//தற்போதைய விமான நிலையத்தை விரிவுபடுத்தினால் ஒரு ஓடுபாதை மட்டுமே கூடுதலாக அமைக்க முடியும் என்றும், இதற்கு பதிலாக ஒரகடம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தரிசாக உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்களை கையகப்படுத்தி அதில் கிரீன்பீல்டு எனப்படும் சர்வதேச தரத்துடன் கூடிய மிகப்பெரிய விமான நிலையங்களை அமைக்கலாம் என்றும், 4 பிரம்மாண்டமான ஓடுபாதைகளை அமைக்கலாம் என்றும், அதில் ஒரே சமயத்தில் பல மிகப்பெரிய விமானங்கள் கூட இறங்கலாம் என்றும் அந்த கட்சிகள் யோசனை தெரிவித்தன.//




தமிழ்நாட்டுக்கு பிறகு ஆரம்பித்த ஐதராபாத், பெங்களூர் எல்லாம் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழ்கம் விரைவாக இதில் செயல்படவில்லை என்றால், நிச்சயம் விமான போக்குவரத்தில் அது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும். பிறகு பெரிய விமானன்களில் செல்ல பெங்களுக்குகோ அல்லது ஐதராபாத்துக்கோ செல்ல வேண்டிய நிலை வரும்.

தமிழ்க அரசு துரிதமாக செயல்படுமா?

Boston Bala said...

தொடர்பான முந்தைய பதிவு: Chennai Airport land acquisition opposed - Citizens displaced « Snap Judgment

நிகழ்வுகள்: Anagaputhur « Tamil News

அசுரன் said...

நல்ல விசயம்.....

விமான ஊழியர்களின் திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அசுரன்

-o❢o-

b r e a k i n g   n e w s...