.

Sunday, July 15, 2007

இந்தியா: திரும்பி வந்த பிரதமரின் காசோலை.

பிரதமர் நிவாரண நிதியாக கொடுத்த காசோலை திரும்பிய விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியரும், ஒரு முதுநிலை அலுவலரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்போதைய மாவட்ட ஆட்சியரும் விளக்கம் தரும்படி பணிக்கப்பட்டுள்ளார்.

வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிர விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம், யவட்மால் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா ஷிண்டே என்ற விதவை பெண் ணுக்கு, அப்போதைய கலெக்டர் ஹர்ஷதீப் காம்ப்ளே, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு காசோலையை வழங்கினார். வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி யவட்மால் மாவட்டமத்திய கூட்டுறவு வங்கியோ, கடந்த மாதம் திருப்பி அனுப்பிவிட்டது.

இந்த விவகாரத்தை, விதர்பா ஜன அந்தோலன் சமிதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதனால், மகாராஷ்டிரா அரசு உடனடியாக, தலைமை நிதி செயலர் வித்யாதர் காண்டேவை இது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையே, பிரதமர் அலுவலக மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு, கடந்த 7ம் தேதி டில்லியில் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு ரூ.50 இலட்சம் பணத்தை அனுப்பி விட்டோம். இருப்பினும், காசோலை திரும்பி வந்ததற்கு, மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்' என்று தெரிவித்து இருந்தார்.

அதற்கு மகாராஷ்டிர அரசு அளித்த விளக்க கடிதத்தில், "மாவட்ட ஆட்சியர் இரண்டு கணக்குகளை நிர்வகித்து வருகிறார். அதில் ஒரு கணக்கில், பணம் இல்லாமல் போய் விட்டது. அந்த கணக்கின் பேரில், காசோலை வழங்கப் பட்டதால், அது பணமில்லாமல் திரும்பி வந்து விட்டது' என்று தெரிவித்தது.

இது தொடர்பாக, காசோலை வழங்கிய அப்போதைய மா.ஆட்சியர் காம்ப்ளேவுக்கு விளக்கம் கேட்டுகுறிப்பாணை (NOTICE) அனுப்பப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் எஸ்.என்.மிஸ்ரா மற்றும் முதுநிலை அலுவலர் டி.கே.காதனே இருவரும் இடைநிறுத்தம்' செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினமலர்

1 comment:

Anonymous said...

Whether that lady got the amount or not?

-o❢o-

b r e a k i n g   n e w s...