கோவையில் பரபரப்பு.
கோவையில் நீதி மன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட கோவை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட கைதிகள் இன்று நீதி மன்றத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல மறுத்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 103 வது எதிரியாக கடந்த எட்டு வருடங்களாக சிறையில் உள்ள ஷெரிஃப் (வயது 26) என்பவருக்கு கோவை கலவரத்தில் முழங்காலில் குண்டுத்துகள்கள் பாய்ந்ததால் கடந்த எட்டு வருடங்களாக சிறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் நிலைமை மோசமானதை அடுத்து, கோவை கங்கா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும், தவறினால் கால் அழுகி காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் கடந்த 31-05-2006 அன்று உடனடி சிகிச்சை மேற்கொள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு தரப்பு இவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று தடை உத்தரவு பெற்றது.
ஏற்கனவே முந்தைய அரசின் உதாசீனத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காததாலும் ஏற்கனவே கைதி ஒருவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் கைதிகளின் மருத்துவ சிகிச்சைக்கு எதிராக அரசு தரப்பு மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்படாமல் தடை உத்தரவுகளை பெற்றுள்ளதால் பல கைதிகள் உடல் உறுப்புக்களையும் உயிரையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று விசாரணைக்காக நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் சுமார் ஐம்பது பேர், அல் உம்மா சிறைவாசி கோவை முகம்மது அன்சாரி என்பவரின் தலைமையில் நீதி மன்றத்தை விட்டு சிறை திரும்ப மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவையெங்கும் பரபரப்பாக காணப்பட்டது, காவல் துறையின் உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் தொடர்நது கைதிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் கடந்த அரசின் அதே மெத்தனப்போக்கும், காழ்ப்புணர்ச்சியும் இப்போதும் தொடர்வதாகவும் இந்நிலை மாறவேன்டும் என்றும் மற்றும் கடந்த எட்டு வருடங்களாக தகுந்த சிகிச்சையில்லாமல் வாடிவரும் கைதிகளுக்கு உடனடி சிகிச்சையும் மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளும் வழங்க வேன்டும் என்றும் ஷெரிஃப் என்பவருக்கு உடனடியா விசாரனை நீதிபதியின் பரிந்துறையின்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வெளியேற மறுத்தனர்.
இரவு பத்தரை மணி வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையின் முடிவாக தாசில்தாரும் காவல்துறை அதிகாரிகளும் இரண்டு நாட்களில் இதுகுறித்து சரியான தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கைதிகள் சிறைக்கு திரும்பினர். காலையில் இருந்து இரவு பத்தரை மணி வரை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், கைதிகளின் உறவினர்களும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியதாலும் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment