வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தி இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளிலும், ஜுலை 1-ந் தேதி முதல் பிற இடங்களிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை விலக்கம் செய்யவேண்டும் என்று பொறியாளர் நிம்முவசந்த் என்ற பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இரு சக்கர வாகனங்களினால் மிக குறைந்த அளவில் தான் விபத்துக்கள் ஏற்படுவதால் தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.
வாகனச்சட்டம் 129ம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டம், சுதந்திரமாகச் செல்ல வழி வகுக்கும் அரசியல் சட்டப்பிரிவு 21 க்கு எதிராக அமையவில்லைஎன்பது தீர்ப்பின் சாரமாக இருந்தது.
செய்தி மூலம்: மாலைமலர்
No comments:
Post a Comment