.

Friday, February 16, 2007

சற்றுமுன்... அறிமுகம்

உலகெங்கும் உடைபடும் செய்திகளை உடனுக்குடன் வலைப்பதிக்கும் முயற்சி இது. செய்திக்கென பல தளங்கள் இருக்கின்றபோதிலும் திரட்டிகளில் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தளம் செயல்பட இருக்கிறது.

சற்றுமுன் வந்த செய்திகள் முக்கியமாக Breaking News வகை செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். சில பத்திகளும் செய்தி அலசல்களும் இடம்பெறும். இன்னும் சில சிறப்பம்சங்களை தர இருக்கிறோம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் கூட்டு முயற்சி இது.

உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது பின்னூட்டமாகதெரிவிக்கலாம்.

குழுவில் சேர்ந்து செயல்பட விரும்புபவர்கள் மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் கூடவே உங்கள் பதிவின் சுட்டி மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடவும்.

இந்த முயற்சி பற்றிய மேலான கருத்துக்களை சொல்லுங்கள். செயல்முறை திருத்தங்களையும் சொல்லுங்கள்.

உங்கள் பேராதரவை நாடும்...

சற்றுமுன் குழு.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிறில், நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பக்கப்பட்டையில் பகுதி/துறை வாரியாக சற்று முன் செய்திகள் இருப்பது அருமை. ஈழ செய்திகளுக்கு ஒரு ஓடை வைக்கவும். நம்மை விட ஈழ செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்போர் வலையில் அதிகம் உண்டு. தமிழ்நாட்டு ஓடை ஒரு முறை வருகிறது. அதை நீக்கலாம். பதிவுத் தலைப்பில் breking news என்று எழுத்துப் பிழையோடு இருக்கிறது. திருத்துங்கள் :) கங்கூலி retired hurt ஆனதெல்லாம் ஒரு breaking newsஆ? ஒரு வேளை அவர் காலை உடைத்துக்கொண்டு திரும்பியதால் இது உடைபடும் செய்தியா ;) செய்திகள் தருவதில் இன்னும் கொஞ்சம் நிதானமும் முக்கியத்துவமும் தரலாம். அப்படியென்றால், நிச்சயம் இதை செய்திப் பதிவாகத் தொடர்ந்து படிக்க ஒரு வாய்ப்பு உண்டு. இல்லையேல், தமிழ்மணத்தில் முன்னிலைப்படுத்தல் கயமை என்று பிரச்சினை கிளப்பப்பட வாய்ப்புண்டு :)செந்தழல் ரவியின் வேலைவாய்ப்பு இதழ் போல் இது ஒரு உருப்படியான பதிவு. 2007 முடிவில் தமிழ்ப்பதிவுகள் போக்கில் கவனிக்கப்படும் என்று நம்புகிறேன். rediff ஓடைகளை தருவதை காட்டிலும் google news ஒடைகள் இன்னும் பயனுள்ளவை. தமிழுக்கு thatstamil தள ஓடையை முயலலாம். ஈழ செய்திகளுக்கு சுரதா தளம் உதவலாம். 9th worl cup என்ற குறிச்சொல் பிழையோடு இருக்கிறது.. கவனித்துத் திருத்தலாம். இப்போதைக்கு நான் அவ்வளவாக செய்தித் தளங்கள் பார்ப்பதில்லை. அதனால், பின்னர் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பாஸ்டன் பாலாவின் தமிழ்நாட்டு ஓடை இரு முறை வருகிறது. ஒன்றை நீக்கலாம்.

சேதுக்கரசி said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

Thanks Sethu's Queen.

:))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

திடீர்னு செய்திப் பதிவுகள் பெருகுதல் coincidence தானா? ஆனா, செய்திப் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குன்னு நினைக்கிறேன். முன்ன பாஸ்டன் பாலா மட்டும் தான் வைச்சிருந்தார். இப்ப இன்னொன்னு புதுசா இங்க பாருங்க http://saral.wordpress.com/

-o❢o-

b r e a k i n g   n e w s...