நேற்றைய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் உ.பி்.யில் முலாயம்சிங் ஆட்சியைக் கலைக்கும் திட்டத்தை கைவிடும் எனத்தெரிகிறது.திரு இராகுல் காந்தி உட்பட சில தலைவர்கள் குடியரசு தலைவர் ஆட்சியை ஆதரித்தாலும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதனால் ஏற்படும் நன்மைதீமைகளை கணக்கில் கொண்டு திரு ஏ.கே ஆண்டனி மூலம் கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பி.ஜேபி யின் ஆதரவின் பின்னணியில் அரசு கலைப்பு நிகழ்ந்தால், காங்கிரஸின் சமயசார்பற்ற நிலை பிம்பத்திற்கு தீங்கு விளையலாம் என்பதும் பீஹார் விதயத்தில் கை சுட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர், தான் விலகவிருக்கும் நேரத்தில் தன் பெயருக்கு இழுக்கு வருவதை விரும்பாது தடங்கல்கள் கொடுக்ககூடும் என்பதும் முதன்மை காரணிகளாகும்.
No comments:
Post a Comment