.

Wednesday, March 14, 2007

பாகிஸ்தான் தோல்வி ! !

மேற்கிந்தியத்தீவுகளுடன் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் 54 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. வெகு சொற்ப ரன்களுக்கு மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டம் இழந்துவிடுவது போல் தோன்றிய நிலையில் அவ்வணியின் சர்வானும், லாரவும் ஜோடி சேர்ந்து அணியை சற்று நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர். பின்பு சாமுவேல்ஸ் சிறப்பாக ஆடி 63 ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினார். இறுதியில் ஆடிய ஸ்மித்தும் ப்ரேவோவும் அதிரடியாக ஆடி அணி 241 ரன்கள் சேர்க்க உதவினர். கடைசி பத்து ஓவர்களில் 85 ரன்கள் அடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இஃப்திகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்பு ஆடத்துவங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதலே தடுமாறி வந்த்து. அவ்வணியின் கேப்டன் இண்ஜமாமும், யூசுஃபூம் நிதானமாக் ஆடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதன் பின் வந்த அனைவரும் மளமளவென ஆட்டமிழந்து திரும்பினர். ஷோஹைப் மாலிக் மட்டும் தாக்குபிடித்து ஆடி 62 ரன்கள் சேர்த்தார். மேற்கிந்தியத்தீவுகளிம் ஸ்மித்தும் ப்ரேவோவும் த்லா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினர். இதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று மேற்கிந்தியத்தீவுகள் முதலிடத்தில் உள்ளது.

விரிவான ஸ்கோர்களுக்கு

3 comments:

சிவபாலன் said...

Mani,

This is a wake up call for Pak.

They usually do good when the tournament progress on. Hope they will give better play..

Good Start for WI. Congrats!

மணிகண்டன் said...

//Mani,

This is a wake up call for Pak.

They usually do good when the tournament progress on. Hope they will give better play..

Good Start for WI. Congrats!

//

Yeah Sivabalan,

Congrats to WI for thrashing Pakistan!!!

Hope they(Pak) won't do good as the tournament progress on :)

தென்றல் said...

"Deccan Herald"-டை விட fastஆ இருக்கிறீங்க, மணிகண்டன்!

மே.இ -க்கு வாழ்த்துக்கள்!

//
They usually do good when the tournament progress on. Hope they will give better play..
//

சரியா சொன்னீங்க, சிவபாலன்!

-o❢o-

b r e a k i n g   n e w s...