ஐ எம் எப் எனப்படும் சர்வதேச நிதி நிறுவனத்துடனான தனது பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் அங்கோலா இரத்து செய்துள்ளது. தன்னுடைய பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணும் வழி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அங்கோலா தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக உள்நாட்டில் உள்ள மூலதனத்தைக் கொண்டே பொருளாதாரக் ஸ்திரத்தன்மையை கொண்டுவரக் கூடிய கொள்கைகளை அமல் படுத்தியதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்தார். அங்கோலாவில் இருக்கும் பெருமளவிலான எண்ணை வளம் காரணமாக அந்நாட்டிற்கு சர்வதேச நிதி நிறுவனத்தின் உதவி தேவைப்படவில்லை என்று அந்நாட்டில் இருக்கும் பி பி சி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
BBCTamil.com
Wednesday, March 14, 2007
அங்கோலா: IMF பேச்சுவார்த்தைகள் ரத்து
Labels:
உலகம்,
பொருளாதாரம்
Posted by
Boston Bala
at
6:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment