.

Thursday, March 22, 2007

சற்றுமுன்: முதல்வர் கருணாநிதி கர்நாடகத்துடன் 'கா' !

சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன் இன்னும் 10 நாட்களில் பேச்சு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கருணாநிதி தனக்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும் குமாரசாமி கூறியிருந்தார்.

இதற்கு கருணாநிதி இன்று மறுப்பு தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவெ கௌடா எனது நீண்ட நாளைய நண்பர். அவருக்கும், அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமிக்கும் நான் உகாதி வாழ்த்து தொடர்பாகத்தான் செய்தி அனுப்பினேன்.

நான் அனுப்பிய செய்தி முழுக்க முழுக்க உகாதி தொடர்பானதுதான். காவிரி தொடர்பானது அல்ல. எனவே கர்நாடகத்துடன் பேச்சு நடத்த நான் தயாராக இருப்பதாக குமாரசாமி கூறியிருந்தால் அது தவறானது, அதை செய்தியாக வெளியிட்டால் மிக மிக தவறானது.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்தப்பட மாட்டாது என்றார் கருணாநிதி.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் பாமக அதுதொடர்பாக சட்டசபையில் பிரச்சினை எழுப்பினால் எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, பிரச்சினை எழுப்பினால் அதை சந்திப்போம் என்றார் கருணாநிதி.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...