சென்னை, ஏப். 10: செண்டூர் வெடி விபத்து போன்ற விபத்துகள் அனைத்து ஆட்சிக் காலத்திலும் நடைபெற்றுள்ளன.
அதிமுக ஆட்சியின்போது ரசாயன பொருள் ஏற்றிவந்த லாரி அரசு பஸ்சுடன் மோதி 54 பேர் உயிரிழந்தனர்.
அப்போது இதே பேரவையில் ஜெயலலிதா,
"இயற்கையாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது மனமாச்சரியங்களுக்கு இடம் கொடுக்காமல், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்,''என்று குறிப்பிட்டுள்ளார். அக்கூற்றை ஏற்று அதே கருத்தை நானும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கூறினார் கருணாநிதி.
Dinamani
2 comments:
நல்ல இலக்கியங்களைச் சிந்தித்த கலைஞர் ஜெ.ஜெ பிதற்றல்களை எல்லாம் மண்டைக்குள் போட்டு வைத்திருப்பதை அறியும் போது
கவலைப்படத்தான் முடிகிறது.
புள்ளிராஜா
அதிமுக ஆட்சியில் சென்னை பெங்களூர் சாலையில் வேலூர் அருகே நடந்த அந்த விபத்தில் லாரியில் வந்த எரிபொருள் பென்சீன் என்பது உடனே எல்லோருக்கும் தெரிந்தது.
திமுக ஆட்சியில் வெடித்தது ஆர்டிஎக்ஸா? ஜெலட்டின் குச்சிகள் தமிழ்நாட்டுக் கல்குவாரி உடைப்புக்கு எனில் எந்தக் குவாரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது?
இத்தனைநாளாகியும் வெடிபொருள் என்ன என்பதைப் பற்றியே ஒரு தகவலும் இல்லை!
நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களை அரசு ஒருபோதும் சும்மாவிடாதுன்னு நேத்து சட்டமன்றத்தில் பேசினது வெடித்தது ஆர்டிஎக்ஸ்தான் என்பதை உறுதி செய்கிறது.
கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் எடுத்துச் செல்வது நாட்டைக்காட்டிக் கொடுப்பதாகதுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சது தானே!
வேறெங்கோ யாரையோ வெடித்துச் சிதறடிக்கக் வெடிமருந்துக் கடத்தல்/கொள்முதல் பரிவர்த்தனையில் சிதறிச் செத்தது தமிழகத்து அப்பாவிகள்!
கருணாநிதி அரசு என்றாலே வெடி வெடிக்கும் முன்பு கோவையில், தற்போது செண்டூரில்... இவை சாதாரண சாலைவிபத்துச் சம்பவங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கும் கயமத்தனமான கூற்றை மறுக்கவேண்டும்!
Post a Comment