.

Sunday, April 1, 2007

சற்றுமுன்: இன்சமாம் குமுறல் பேட்டி- இந்தியா, பாக் வீரர்கள் பரிதாபம்

“விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்தான் விளையாட்டு வீரர்கள் பீதியுடன் வாழ வேண்டிய அவலமான நிலை இருக்கிறது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

லாகூரில் நிருபர்களிடம் நேற்று இன்சமாம் கூறியதாவது:

உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்பினேன். ஆனால், தோற்று விட்டோம். எனக்கும் அதிர்ச்சிதான். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். ஆனால், சோதனையான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய பத்திரிகைகளும், டிவி சேனல்களும், பாகிஸ்தான் அணியை கிழிகிழியென்று விமர்சிப்பது அநியாயம். இரண்டு போட்டிகளில் தோற்றதால் நாங்கள் பாகிஸ்தானியர் இல்லை என்று ஆகிவிடுமா? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எது நடந்தாலும் அதற்கு இன்சமாம்தான் பொறுப்பு என்று பத்திரிகைகள் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

உலகக்கோப்பையில் தோற்றதால் பாகிஸ்தானில் கிரிக்கெட் அழிந்துவிடாது. திறமையான வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். மீண்டும் வலுவான அணியாக வரலாம்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். உலகத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் இது புரிகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டும்தான் மக்களுக்கு தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

- தினகரன்

4 comments:

கோவி.கண்ணன் said...

ரொம்பவும் உசாராக இந்தியாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார் இன்சமாம் ! சபாஸ்.

நாம மாட்டும் இல்லேட அவனுங்களும் தான்னு சொல்லாமல் சொல்வது இது !
:))))))

-L-L-D-a-s-u said...

அவர் சொல்வது நியாயம்தான்.. இலங்கையில் இப்படி இல்லையாம்..பாகிஸ்தான் , இந்தியாவில் மட்டும்தான் இப்படி.. உலகம் சிரிப்பது இந்தியா தோற்றதற்காக அல்ல, இந்தியர்கள் கொடும்பாவி எரிப்பதற்குதான்..
இந்திய ஆட்டக்காரர்கள் விளம்பர வருமானத்திற்கான விலையை கொடுக்கிறார்கள் என சமாதானம் சொல்லலாம்.. பாவம் பாக். ஆட்டக்காரர்கள்

சிவபாலன் said...

GK,

//நாம மாட்டும் இல்லேட அவனுங்களும் தான்னு சொல்லாமல் சொல்வது இது !//

Ha Ha Ha..

பாவம் இன்சமாம். விட்டுங்க..

VSK said...

Newzealand crushed BanglaDesh with a big margin.
Scores:
BanglaDesh: 174 all out in 48.3 overs
NZ: 178 for 1 in 29.2 overs

Fleming scored 102 n.o.!

-o❢o-

b r e a k i n g   n e w s...