.

Monday, April 2, 2007

நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்கள் இன்று அரசில் அமைச்சர்களாக பதிவியேற்றதை அடுத்து அங்கு நிலவி வந்த அரசியல் முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. அந்த நாட்டில் 10 ஆண்டுகளாக நிலவி வந்த இரத்தக் களரியான உள்நாட்டுப் போருக்கு முடிவு காண மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை அடுத்து, முன்னள் மாவோயிஸ்டுகள் ஐந்து பேர் இன்று அமைச்சர்களாகவும், ஒருவர் துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

அமைச்சு பொறுப்புகளை பங்கிட்டுக் கொள்வது குறித்து கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இருந்து வந்த இழுபறி காரணமாக புதிய அமைச்சரவை பொறுபேற்பது தாமதித்து வந்தது. நேபாளத்தில் உள்ள மொத்த 21 அமைச்சர்களில், மாவோயிஸ்டுகளுக்கு

  • செய்தித்துறை,
  • உள்ளூர் வளர்ச்சி,
  • திட்டமிடல்,
  • காடு வளர்ப்பு,
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேபாளத்தில் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கியுள்ளது என பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியுள்ளார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பிற்குப் பிறகு பேசிய மாவோயிஸ்டுகளின் தலைவர் பிரசண்டா அமெரிக்கவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...