.

Monday, April 2, 2007

ச: தமிழகத்தில் தடையற்ற மின்சப்ளை-ரூ.16 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்

தமிழகத்தில் தடையற்ற, நம்பகமான, தரமான மின்சாரம் கிடைப்பதற்கு ஐந்தாண்டு திட்டம் ஒன்றை தமிழக அரசும் தமிழ்நாடு மின்சார வாரியமும் நிறைவேற்ற உள்ளது. இதற்காக, ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கிறது. இதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோர்க்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வடசென்னை, எண்ணு£ர், மேட்டூர், து£த்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

இது தவிர நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்பு திட்டங்கள், அதிகளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, மின் செலுத்துகை, வினியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுவாக்கும். மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு ரூ.16 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
-தினகரன்

3 comments:

Anonymous said...

தமிழ்க வளர்ச்சியில் இது பெரும் பங்கு வகிக்கும். ஆனால் திட்டம் சரியாக நிறைவேற்றப்படவேண்டும்.

ஜோ/Joe said...

வேறு யாராவது செய்திருந்தால் பரவாயில்லை .இது கருணாநிதி பண்ணுறதால ,அவங்க குடும்பம் சம்பாதிக்குறதுக்கு மறைமுகமா போடப்படுற திட்டம்

(அறிவுஜீவி பின்னூட்டம்)

Anonymous said...

திருடப்படும் மின்சாரங்களால் ஏற்படும் இழப்பு இந்தியாவில் அதிகம்.

அதற்கும் அரசுகள் சரியான திட்டம் உருவாக்க வேண்டும்

-o❢o-

b r e a k i n g   n e w s...