.

Monday, April 2, 2007

ச: 2 ரூபாய் நாணயத்தில் சிலுவை வடிவம்: சிவசேனா கண்டனம்



இந்திய ரிசர்வ் வங்கி சிலமாதங்களுக்கு முன்பு 2006 என்று பொறிக்கப்பட்ட புதிய 2 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. இதில் ஒரு புறத்தில் அசோகச் சின்னம், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்றும், 2 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிலுவை வடிவம் ஒன்று பெரிய அளவில் காணப்படுகிறது.

நாணயத்தில் சிலுவை வடிவம் இடம் பெற்றிருப் பதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் நாக்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வழக்கமாக நம் நாட்டு நாணயத்தில் இந்திய வரைபடம் அசோக சின்னம்தான் பெரிதாகப் பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால் தற்போது அசோக சின்னத்தை சிறிதாகப் போட்டு விட்டு சிலுவை வடிவத்தை பெரிதாக பொறித்திருக்கிறார்கள்.இது இந்துக்களின் மனதைப்புண்படுத்துவதாக உள்ளது.அந்த நாணயங்களில் உள்ள சிலுவை அடையாளத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நாங்கள் இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் போன்றவைகளுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இதுபற்றி நான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனுடன் ஆலோசனை நடத்தினேன். அவரும் நாணயத்தில் சிலுவை பொறிக்கப்பட்டிருப்பதை சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து அமைப்புகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.ஏற்கனவே வெளியான நாணயங்களில் இந்திய வரைபடம்தான் பெரிய அளவில் இருந்தது. அந்த வரைபடத்தை நீக்கி விட்டு தீடீரென சிலுவை அடையாளத்தை பொறித்ததன் மர்மம் என்ன?

நாங்கள் இதுபற்றி பிரச்சினை எழுப்பினால் மதவாதிகள் இப்படித்தான் சொல்வார்கள் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் இது மதபிரச்சினை அல்ல. தேசிய பிரச்சினை.

- மாலை மலர்

2 comments:

Boston Bala said...

Related stories...

1. Thinnai: "நாணயத்தின் மறுபக்கம் :: அருணகிரி"

2. IdlyVadai - இட்லிவடை: இரண்டு ரூபாய் தான் !

Anonymous said...

அரசியல் செய்வதற்கு ஏதோ ஒரு காரணம் அவ்வளவே.

நாடு உருபடும்

-o❢o-

b r e a k i n g   n e w s...