.

Friday, April 13, 2007

பிளாக்கரில் இந்தியில் பதிவது இனி எளிது

பிளாக்கரில் இந்தியில் நேரடியாகபதிய கூகிள் புதிய நிரலியை நிறுவியுள்ளது. அதுவாகவே கற்றுக் கொள்ளும் திறன் உள்ள நிரல் ஆதலால் ஆங்கில எழுத்துக்களின் வினோத கூட்டுக்களை ( உ-ம்: maNam) நினைவில் கொள்ள வேண்டாம். இந்த கற்றல் தனியொருவருக்கானதாகையால் இந்தி ஆங்கில மொழிபெயர்ப்பு நம் விருப்பப்படி இருக்கலாம். இணையத்தில் எங்கிருந்தாலும் கிடைக்கின்ற வசதி வேறு.

இது பற்றி..Official Google Blog: Now you can blog in Hindi

இதுபற்றிய விவாதக் களம்

5 comments:

மணியன் said...

யாராவது நம்ம தோழர்கள் கூகிளில் வேலை செய்கிறீர்களா ? உடனே தமிழுக்கு இந்த வசதி ஏற்படுத்துங்க தோழர்களே !

வடுவூர் குமார் said...

யாராவது செய்யுங்கப்பா!!

பொன்ஸ்~~Poorna said...

நம்ம ரவிசங்கர் கூட இது பத்தி எழுதிருக்காரு..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கூகுள் அதிகராப்பூர்வக் குழுமத்தில் இது போல் பிற இந்திய மொழிகளுக்கும் விரைவில் வரும் என்றிருக்கிறார்கள். நானும் வழக்கம் போல அதுக்கு ஆலோசனை சொல்லி இருக்கேன் ;) நிச்சயம் தமிழ் ஆட்கள் இருப்பாங்க..கவனிச்சுக்குவாங்க..இல்லாட்டியும், இந்திய மொழிச் சந்தை மிகப் பெரிசு. ஜிமெயில் தொடங்கி பிற கூகுள் சேவைகளுக்கும் பிற இணையத்தளங்களிலும் இது விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்

சாத்தான் said...

அது Blocker அல்ல, பிளாகர். அதாவது Blogger. யோசித்துப் பாருங்கள். அப்புறம் உங்கள் இஷ்டம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...