.

Tuesday, May 1, 2007

இன்று திரைக்கு வருகிறார் 'பெரியார்'

சென்னை, மே 1: "பெரியார்' திரைப்படம் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை திரையிடப்படுகிறது.

"மனிதனை மனிதனாக தன்மானத்தோடு வாழ்வதற்கு வழிவகுத்த சீர்திருத்தவாதியின் வாழ்க்கயை சித்தரிக்கும் இப்படத்தை திமுகவினர் அனைவரும் பார்வையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, தனது கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான "முரசொலி' மூலம் இத்தகைய வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். லிபர்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பான இப்படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் அளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று திரைக்கு வரும் இத்திரைப்படத்தை அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கே.என். நேரு, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோரின் உறவினர்கள் முறையே சென்னை, திருச்சி, கோவையில் திரையிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். இதேபோல பல திமுக பிரமுகர்களும், இத்திரைப்படத்தை வாங்கி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டதோடு, தேவையான ஆலோசனைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.

இத்திரைப்படம் தொடக்க விழாவிலிருந்து சர்ச்சைக்கு உள்ளாகி வந்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக 'குஷ்பு' நடிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல இப்படத்தின் பாடலுக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இத்தனை தடைகளையும் தாண்டி இத்திரைப்படம், செவ்வாய்க்கிழமை திரையிடப்பட உள்ளது.

பெரியார் பட ட்ரெயிலரை இங்குப் பார்க்கலாம்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...