ஒசூர், ஏப். 30: எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்:
என்னுடைய திருமண மண்டபத்தை இடித்தார்கள். எனக்குப் பல வழிகளில் பொருளாதாரரீதியாக தொந்தரவு கொடுத்துப் பார்த்தார்கள். இப்படி எல்லாம் தொந்தரவு கொடுத்தால் இவன் கூட்டணியில் சேர மாட்டானா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், எனக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்.
மலை ஏறுவது கடினம்தான்; ஏறிய பிறகுதான் தெரியும் மலை நமது காலுக்கடியில் இருப்பது.
நான் பிழைப்பிற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கின்றேன்.
சிலர் என்னை சீண்டி பார்க்கிறார்கள். இளைஞர்களை தூண்டிவிட்டால் தமிழ்நாடே பற்றி எரியும். ஆனால் இளைஞர்களை நல்வழியில் நடத்த வேண்டியது நம் கடமை. விஜயகாந்த்தை அழிக்கவும், அடிக்கவும், நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது.
சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 8.33 சதவிகிதமாக இருந்த வாக்கு வங்கி தற்பொழுது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
படித்த இளைஞர்களுக்கும், படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
எந்த அரசியல் தலைவரும் தனி மனித வருமானத்தைத் தெரிவிப்பதில்லை. மத்திய நிதி அமைச்சரை கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் நமக்குக் கிடைக்கவில்லை.
Dinamani
Monday, April 30, 2007
எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன்: விஜயகாந்த்
Posted by Boston Bala at 11:13 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment