.

Monday, April 30, 2007

நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினர் ஆளுங்கட்சியினர் இடையே தொடரும் வன்முறை தாக்குதல்

நந்திகிராமம், ஏப். 30: மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராமத்தில் நில பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வன்முறைத் தாக்குதல் நடந்தது. ஹெஜுரியில் இருந்து திரண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200 பேர் நந்திகிராமத்தில் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை நில பாதுகாப்பு அமைப்பினர் எதிர்த்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் கையெறி குண்டுகளை மாறி மாறி வீசினர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் பலியானார். இருவர் காயம் அடைந்தனர். நந்திகிராமத்தைச் சுற்றியுள்ள பங்கபெரா, சதிங்கபரி, ஆதிகரிபரா மற்றும் சிமல்குந்து பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...