முஸ்லிம்களுக்கு கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசர ஆணை இன்னும் ஒருவாரத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். இன்றிரவு ஏழாவது அனைத்துலக இஸ்லாமிக் இலக்கிய மாநாட்டில் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான் கான் கேரள,கர்நாடக மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு போல தமிழகத்திலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த ஒதுக்கீடு 69% உள்ளேயே இருக்கும் என்று முதல்வர் கூறினார்.
முன்னதாக முதல்வருக்கு உமறு புலவர் விருது வழங்கி ஒரு இலட்ச ரூபய் சம்மானமும் ஒரு நினைவுப் பொருளும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
DNA - India - TN to provide reservation for Muslims - Daily News & Analysis
Sunday, May 27, 2007
ச: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு : தமிழக அரசு அவசர ஆணை பிறப்பிக்கும்
Labels:
இடஒதுக்கீடு,
தமிழ்நாடு
Posted by மணியன் at 10:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
He didn't say like that, I was in the meeting too. Kaligner said if the neighbouring states Kerala and Andra implemented the 4 % reservation for Muslims, tomorrow itself I will declare in Tamilnadu. But he said there is some 'sattap pirachinai' in this issue.
முதல்வரின் அறிவிப்பை வரவேற்க்கிறேன்...
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: ஒரு வாரத்தில் அவசரச் சட்டம்: கருணாநிதி
சென்னை, மே. 28:தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இன்னும் ஒரு வாரத்திற்குள் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இது வழங்கப்படும்.
சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7-வது மாநாடு நிறைவு விழாவில் அவர் பேசியது:
இந்த மாநாட்டில் எனக்கு வழங்கப்பட்ட உமறு புலவர் விருதுடன் ரூ. 1 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை 5-ஆக பிரித்து பொறியியல் படிப்பில் சேர உள்ள 5 ஏழை மாணவர்களுக்கு அவர்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும்.
கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்த மாநாட்டில் பேசியவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த மாநிலங்களில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதாக உறுதியாக தெரிவித்தால் நாளையே அரசாணை வெளியிட தமிழக அரசு தயாராக உள்ளது.
இந்த இட ஒதுக்கீடு ஆந்திர மாநிலத்தில் சட்டச் சிக்கலில் உள்ளது. குறுக்குப் பாதையில் செல்பவர்களால் இது அந்த மாநிலத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இந்த இடஒதுக்கீடு உள்ளது என்றால், தமிழகத்திலும் அதை வழங்க ஒரு வாரத்திற்குள் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும். ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அதில் சந்தோஷமாக கையெழுத்திடுவார்.
செகு தம்பி பாவலர் நினைவுத் தபால் தலை: சதாவதானி செகு தம்பி பாவலருக்கு நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என இந்த மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்றப்படும். மத்திய அமைச்சர் ஆ.ராசா மூலம் அது நிறைவேற்றப்படும்.
இஸ்லாமியர்கள் நேர்மை, நியாயம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டவர்கள்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவது அவசியம் என இஸ்லாத் போதிக்கிறது. ஆனால், கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறியவர்கள் உலக அளவிலும், நாடு அளவிலும், ஊர் அளவிலும், தெரு அளவிலும், நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள்.
உதாரணமாக சர்வதேச நாடுகளிடம் அமெரிக்க அதிபர் புஷ் அளித்த வாக்குறுதியை மீறியதால் தான் சதாமை உலகம் இழந்தது. இராக் நாட்டில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர் என்றார்.
ரகுமான்கான்: நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவர் ரகுமான்கான் பேசியது:
நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு 12 வருடங்களாக நடைமுறையில் உள்ளது. மற்ற மாநிலங்களும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் சட்டப்படியான நியாயம் கிடைக்க வேண்டும் என்றார் ரகுமான்கான். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் கவிஞர் அப்துல் ரகுமான், பேரவைச் செயலர் இதயதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கர்நாடகாவிலும் கேரளாவிலும் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளித்துச் சட்டம் இருந்தால், அத்தகைய சட்டம் தமிழ்நாட்டிலும் இயற்றப்படும் என்று பொது மேடையில் உறுதியளித்திருக்கிறார் முதல்வர். அதென்ன "இருந்தால்?" இருக்கிறதா, இல்லையா என்று ஒரு (ரூபாய்!) ஃபோன்கால் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே?
இன்னும் எத்தனை வாரம் கழிய வேண்டுமாம்?
Post a Comment