தமிழக முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்தநாள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கிறார்.
காலை 7 மணிக்கு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 8 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை முக்கிய பிரமுகர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.
காலை 8.45 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பாக தமிழகமெங்கும் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மரக்கன்றை கருணாநிதி நடுகிறார்.
காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்திலும், மாலை 4 மணிக்கு சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது இல்லத்திலும் முக்கியப் பிரமுகர்களும், கட்சி நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து கூறுகின்றனர்.
வாழ்த்து பெறும் இடங்களில், உண்டியல் மூலம் பிறந்த நாள் நிதி வசூலிக்கப்பட்டு பல்வேறு நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
இரவு 7 மணிக்கு கிண்டி ஹால்டா சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றுப் பேசுகிறார். கூட்டத்தில் பலருக்கு நிதி உதவிகளும், தொழில் கருவிகளும் வழங்கப்பட உள்ளன.
பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க. அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Dinamani
Sunday, June 3, 2007
கருணாநிதி 84
Posted by
Boston Bala
at
8:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment