.

Sunday, June 3, 2007

ரஜினியின் இமேஜை கண்டு பயந்தேன்

சென்னை, ஜூன் 3-

சிவாஜி படப்பிடிப்பின்போது ரஜினியின் இமேஜை கண்டு பயந்தேன் என்றார் இயக்குனர் ஷங்கர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சிவாஜி படத்துக்காக 22 மாதங்கள் உழைத்திருக்கிறோம். ஒவ்வொரு காட்சியையும், சிற்பி சிலை செதுக்குவது போல கவனத்துடன் உருவாக¢கி உள்ளேன். ரஜினி ரசிகர்களையும், எனது படம் இப்படித்தான் இருக்கும் என நம்பி வருபவர்களையும் இந்தப் படம் சந்தோஷப்படுத்தும். எனது வாழ்நாளின் சிறந்த படைப்பு இது. படத்தை முடித்துவிட்டேன். இப்போது மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

சிவாஜி கதையை உருவாக்கியதும் நான் பயந்தது, ரஜினியின் இமேஜை கண்டுதான். எந்த ஒரு இடத்திலும் அவரது ஸ்டைலான இமேஜை, படக் கதை உடைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். படப்பிடிப்பின்போதும் அதையே மனதில் வைத்திருந்தேன். படம் முடிந்து இப்போது பார்த்தால், இந்த கதைக்கு ரஜினியின் ஸ்டைலான அந்த இமேஜ்தான் தூணாக உள்ளது.

படத்தின் டிரெய்லரை எடிட்டர் ஆண்டனி சிறப்பாக தொகுத்துள்ளார். ரஜினியின் பஞ்ச் வசனங்கள், சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது. டிரெய்லரே ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்கும் விதமாக உள்ளது.
சிவாஜியை மே 8ம் தேதி அல்லது 17ம் தேதி திரையிட நான் முயன்றதாகக் கூறுவது உண்மை அல்ல. எனக்கு 8ம் நம்பர¢ ராசி என்பதும் பொய்யான தகவல். எனக்கு ராசி போன்ற விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. ஏதேச்சையாக எனது கார் எண் 8 ஆக அமைந்தது. நான் இயக்கிய சில படங்களும் 8 என வரும் வ¤தமான தேதிகளில் ரிலீஸ¢ ஆனது. இதனால் எனக்கு எட்டு நம்பர் ராசி என வினியோகஸ்தர்கள் முதல் என¢னிடம் வேலை பார்ப்பவர்கள் வரை நினைக்கிறார்கள். இப்போது சிவாஜி படம் 15ம் தேதி திரைக¢கு வருகிறது. இதன் மூலம் எனக்கும் எட்டாம் நம்பருக்கும் தொடர்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.



நன்றி: "மாலைச் சுடர்"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...