.

Saturday, June 9, 2007

வளைகுடா: இந்தியத்தொழிலாளர் நிலை!

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியத்தொழிலாளர்களின் பொருளாதார நிலை அத்தனை திருப்திகரமாக இருக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

துபாயிலிருந்து இயங்கும் அரசு சாரா அமைப்பொன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில், 95 சதவிகித இந்தியப்பணியாளர்கள், குறிப்பாக தொழிலாளர்கள், பல வருடங்களுக்குப்பின் நாடு திரும்பும் போது வெறுங்கையுடனே திரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. விலைவாசிகள், வாழ்க்கைச்செலவினங்கள் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனவாம். 10,100 நடுத்தர, குறைந்த சம்பளப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 95 சதத்தினர் இந்தியா திரும்பும் காலத்தில் வாழ்க்கைச் சரவல்களை எதிர்கொள்வதாகவும், மற்ற 5 சதத்தினரே சமாளிக்கும் மனத்துடனும், பணத்துடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பத்து சதவிகித இந்தியர்களே இந்நாடுகளில் குடும்பத்துடன் வசிப்பதாகவும், மற்றவர்கள் குறைந்த சம்பளத்துடனும் அதிகரித்து விட்ட மருத்துவச்செலவுகளுடனும் போராடியே வருவதாக, பிரவாசி பந்து வெல்ஃபேர் டிரஸ்ட் தலைவர் ஷம்சுத்தீன் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப்பணியாளர்களின் தற்கொலை விகிதம் வருடாவருடம் உயர்ந்து வருவதும் மற்றொரு கவலை தரும் போக்காகும். இவற்றுக்கும் மனப்பிரச்னைகளும், பணப்பிரச்னைகளுமே பெரிதும் காரணமாக அமைகின்றனவாம்

The Hindu News Update Service-லிருந்து..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...