மத்திய அரசுக்கு சொந்த மான பிரசார் பாரதி கார்ப்ப ரேஷனுக்கு அதிகநிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதன்படி புதிதாக கலர் டி.வி. வாங்குவோரிடம் இருந்து ரூ.500 உரிமம் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. கறுப்பு வெள்ளை டி.வி.க்கு உரிமம் கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இது பற்றி நாளை நடைபெறும் மந்திரி கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
இது தவிர இன்னொரு திட்டம் ஒன்றும் உள்ளது. கலர் டி.வி.யின் விலையில் 10 சதவீதம் உரிமம் கட்டண மாக வசூலிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது. ஒவ் வொரு கலர் டி.வி.யின் விலை யில் 10 சதவீதம் உரிமம் கட்ட ணமாக வசூலித்தால் பிரசார் பாரதி கார்ப்பரேசனுக்கு ஆண்டுக்கு ரூ.898 கோடி வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் உரிமம் கட்டணத்தை உற்பத்தி வரியில் சேர்த்தால் டி.வி.வாங்குவோர் அதை சுமையாக நினைக்க மாட்டார்கள். ஆனால் டி.வி. வாங்கிய பிறகு ரூ.500 உரிமம் கட்டணம் என்றால் கூடுதல் சுமையாக கருதக்கூடும். இதனால் உற்பத்தி வரியி லேயே ரூ.500 உரிமம் கட்ட ணத்தை சேர்க்கலாமாப என் பது பற்றியும் நாளைய மந் திரிகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதே போல் ரேடியோ வுக்கும் உரிமம் கட்டணம் வசூலிக்கலாமா என்பது பற்றியும் முடிவு செய்யப்பபடுகிறது.
பிரசார் பாரதி கார்ப்ப ரேசனுக்கு ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை செலவாகிறது. ஆனால் தனியார் டி.வி.க்கள் ஆதிக்கத்தால் வருமானம் கணிசமான அளவுக்கு குறைந்து விட்டது. தற்போது ஆண்டுக்கு ரூ.1600 கோடி தான் வருமானமாக கிடைக் கிறது. டி.வி.க்கு உரிமம் கட் டணம் வசூலிக்கப்பட்டால் பிரசார் பாரதி கார்ப்பரேச னுக்கு ஏற்படும் நஷ்டம் குறைக்கப்படும்.
மாலைமலர்
Tuesday, July 10, 2007
கலர் டி.வி.க்கு ரூ.500 லைசென்ஸ் கட்டணம்: மத்திய அரசு புதிய திட்டம்
Labels:
இந்தியா,
தொலைக்காட்சி,
வணிகம்
Posted by Boston Bala at 7:19 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
ஏனுங்கோ!
இதில் இலவச டி.வி.காரகளும் இருக்காங்களுங்களாங்க....
தினகரனில் இருந்து:
பிரசார் பாரதியில் 38,000 ஊழியர்கள் உள்ளனர்.
லைசென்ஸ் கட்டண முறை அமலானால் அரசுக்கு ரூ.23,871 கோடி வசூலாகும். பிரசார் பாரதி சட்டத்தின் 17வது பிரிவின்படி இதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்க முடியும்.
Blogger: User Profile: aravindaan said...
---TV Vanginathane vari kattanum, flat panel monitor vangi tv connect panna enna panuvanga?---
நல்ல ஐடியா!! அது ஏற்கனவே விலை அதிகம்னு நினைக்கிறேன்?
Post a Comment