.

Tuesday, July 10, 2007

இந்தியா: ஓய்வு பெறும் வயது 62.

மத்திய அரசு, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது முன்பு 58ஆக இருந்தது. 1990ம் ஆண்டு ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை மீறி மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளது.

இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு மத்திய மந்திரிசபையும் ஒப்புதல் அளித்து விட்டது. விரைவில் இது சட்ட நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தான் 6-வது சம்பள ஆணையம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு வயது உயர்த்தப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தியர்களின்ஆயுள் காலம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும். ஓய்வு பெறுவர்களுக்கு பணபலன் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மாலைமலர்

2 comments:

முரளிகண்ணன் said...

இது மிக மிக விவாதத்துகுரிய செய்தி இது நல்லதா கெட்டதா என்றே புரியவில்லை

Senthil Alagu Perumal said...

இது மிகவும் கொடியது தான். இதனால் இந்தியாவின் பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் கூடும். இப்போது 60 வயது உள்ளவர்கள் மேலும் 2 வருடம் வேலை செய்வதால் அந்த 2 வருடத்திற்கு புதிய‌ அரசு ஊழியர்களை தேர்வு செய்ய முடியாது. இது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதைத் தடுக்கவும் வேண்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...