.

Tuesday, July 10, 2007

மூன்றாவது அணியில் பரூக் அப்துல்லா கட்சி

தட்ஸ் தமிழில் வெளிவந்துள்ள செய்தி:

3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைகிறது.

அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடிக் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து புதிதாக ஒரு அணியை உருவாக்கியுள்ளன. இந்த அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த அணியில் 9வது கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி இணைகிறது. டெல்லியில், நேற்று நடந்த ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா பேசுகையில், 3வது அணியில் இணைய தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, வரும் 14ம் தேதி டெல்லியில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா வீட்டில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்து இறுதி செய்யப்படுகிறது.

இக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில் பெரும்பாலானவை (சமாஜ்வாடி கட்சி தவிர்த்து) பாஜக கூட்டணியில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த புதிய அணியால் பாஜக தான் பெரும் கவலையடைந்துள்ளது.

மேலும் இவர்களோடு இடதுசாரிகள் கைகோர்த்து விடுவார்களோ என்ற பயத்தில் காங்கிரசும் உள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...