ஐதராபாத் : ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளில் ஒருபாவமும் அறியாத 50 அப்பாவிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புக்கள் சேதமடைந்து படுகாயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு தலைமைச்செயலகம் அருகிலுள்ள லும்பின் பூங்காவில் இரவு 07.45 மணியளவில் நிகழ்ந்தது. இப்பூங்கா பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். மற்றொரு குண்டு அடுத்த 15 நிமிடம் கழித்து கோகுல் சாட் பந்தரில் இரவு 08.15 மணியளவில் வெடித்தது. பயங்கரவாதிகள் சமீபகாலங்களில் தென் மாநிலங்களைக் குறிவைக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக கர்நாடாகாவில் பெங்களூரூவையும், ஆந்திராவில் ஐதராபாத்தையும் தீவிரவாதிகள் இலக்காகக் கொண்டு தாக்கி வருகின்றனர். இவ்விரு நகரங்களும் விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வளர்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தினை நாளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பார்வையிடுகிறார்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது கடும் கண்டன வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார்.
- - தினமலர்
Sunday, August 26, 2007
ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு : 50 பேர் பரிதாப பலி
Labels:
இந்தியா
Posted by சிவபாலன் at 12:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
கொடுமை
இப்பத்தானே ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்னாடி சொல்லிகிட்டு இருந்தாய்ங்க, அதுக்குள்ளர வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டாயங்கள... ரொம்பக் கஷ்டமய்யா வரும் காலம்...
இந்த செயலை செய்த பயங்கரவாதிகளுக்கு மட்டன் பிரியாணி போடுமா ஆந்திர அரசு?
தமிழக அரசு சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பது போல ஆந்திர அரசும் செய்யவில்லை என்றால், அது மத நல்லிணக்க முயற்சிகளில் முன்னிலையில் இல்லை என்பதுதான் பொருள்.
ஆகவே, ஆந்திராவுக்கு செல்லும் ரயில்கள் முன்னால் படுத்து தடுத்து நிறுத்துவோம்.
மிகுந்த கண்டனத்திற்கு உரிய காட்டுமிராண்டிச்செயல்.
மதங்கள் என்கிற போர்வையில் மறைந்துகொண்டு இப்படி அப்பாவி இந்திய உயிர்களை குடிக்கும் பேய்கள் இந்தியாவுக்கு தேவையில்லை மடையர்களே.
இவர்கள் உண்மயான போர்குணம் உடையவர்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட எதிரிகளிடம் முன்னறிவிப்பு செய்து அப்பாவி பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சண்டைகள் செய்து செத்து ஒழியட்டும். யார் தடுக்கப்போகிறார்கள்?
அரசாங்கம் காவல் மற்றும் பாதுகாப்பு துறைகள் சீரிய ஆய்வுகளை நடத்தி, இக்காட்டுமிராண்டி செயலின் பொறுப்பாளர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி கடுமையான தண்டனை கொடுப்பார்கள் என்பது கடமை.
பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment