மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton
In Vidarbha’s darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com
Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt
Sunday, August 26, 2007
விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை
Posted by Boston Bala at 7:30 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
பருத்தி விவசாயிகள் என்று ஆங்கிலத்தில் உள்ள செய்தியை பொதுவாக விவசாயிகள் என மாற்றி விட்டீர்களே,ஏன்?
ஆந்திரா, குஜரத் என தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் அனைவரும் பருத்தி பயிரிட்டவர்களே.
ஏன் எனில் அதற்கு தான் அதிக அளவு பூச்சி மருந்து தேவைப்படும். உற்பத்தி செலவுக்கு அதிகம் பணம் தேவை என்று கடன் வாங்கிவிட்டு அதற்கு ஏற்ற வருமானம் இல்லை என்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
மற்ற விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் பெரிதாக இருக்காது. சமாளிக்க முடியும்.
---பருத்தி விவசாயிகள் என்று ஆங்கிலத்தில் உள்ள செய்தியை பொதுவாக விவசாயிகள் என மாற்றி விட்டீர்களே,ஏன்?---
இது அப்படியே எழுத்துரு மாற்றிப் போட்ட பதிவு. இந்த மாதிரியெல்லாம் மொழியாக்கத் தெரிஞ்சா/தெரிஞ்சவங்க சற்றுமுன்னில் சேர்ந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு அங்கலாய்க்கிற க்ரூப் நான். தினமணி சுட்டியில் இருந்து காப்பி/கன்வர்ட்/பேஸ்ட் போஸ்ட் :)
பிற தகவல்களுக்கு நன்றி!
தகவலுக்கு நன்றி!
பிற பயிர்களில் பாதிப்பு என்றாலும் பாதிக்கு பாதி விளைச்சல் இருக்கும் , அதை கொண்டு போட்ட பணத்தை எடுக்கலாம் அல்லது நஷ்டத்தின் அளவை குறைக்கலாம் , ஆனால் பருத்தியில் போல் வார்ம் என்ற காய்புழு தாக்கினால் செடி மட்டும் தான் இருக்கும் , பருத்தி இருக்காது, முதலீடு செய்த பணத்தில் பாதி கூட எடுக்க முடியாது.இதை தடுக்க அதிக விலையில் பூச்சி மருந்து வாங்குவார்கள் ஆனாலும் விளைச்சல் எதுவும் இருக்காது!அப்புறம் என்ன தற்கொலை தான்!
இன்னும் சொல்ல போனால் அப்படி வெறும் செடிகளை பிடுங்கி அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்யவே செலவு செய்ய வேண்டும்.மேலும் அப்படீப்பட்ட ஒன்றும் விளையாத பருத்தி விதைகளின் விலையும் அதிகம்.
இதனால் நஷ்டம் அதிகம் ஆகும்.மற்ற எந்த பயிரிலும் இப்படி முழு சேதம் ஏற்படாது. அதனால் தான் பருத்தி விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை செய்கிறார்கள்.
மஹாராஷ்டிரத்து மற்றும் இந்திய அரசுகள் வெட்கி தலைகுனியச் செய்யும் நிகழ்வு. இது என்ன இந்தியா? இதைத்தான் அப்துல் கலாம் கனவு கண்டாரா?
என்னதான் கோடி கோடியாக கடன் வாங்கினாலும் ஒரு மனித உயிருக்கு இணையாகுமா?
மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் வங்கிகள் விவசாய சங்கங்கள் அனைத்தும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியாவிடம் பணமா இல்லை? இந்தியா என்ன ஏழை நாடா? படிப்பறிவில்லாத முண்டங்கள் நிறைந்த நாடா?
பிரச்சினைகளை இந்த அளவுக்கு முற்றவிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
பாதிக்கப்பட்டோர் அனைத்து குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பாஸ்டன் பாலா.
திங்கள் தினமணியில் இருந்து:
கடன்சுமையால் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை
மகாராஷ்டிர மாநிலத்தில் மலேகாம் வட்டம் தேவர்பதா கிராமத்தைச் சேர்ந்த நந்து கங்காதர் காலே (35) என்ற விவசாயி, கடன் சுமையால் கிணற்றில் குதித்து சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
வங்கியில் கடன் பெற்றிருந்த நந்து கங்காதர், அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்த அவலமான முடிவைத் தேடிக்கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Post a Comment