.

Wednesday, August 1, 2007

டாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி

திருநெல்வேலி, ஆக. 1: டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலையை நிறுவ வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியில் ஆலைக்கு நிலம் கொடுக்க தயாராக உள்ள விவசாயிகளும், வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்வார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் என். மாலைராஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:

சாத்தான்குளத்தில் டாடா தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகும் என்பதோடு சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

எனவே, இந்தத் தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, நிலம் கொடுக்க தயாராக உள்ள சுமார் 2,500 விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்ளும் பேரணியை நடத்த உள்ளோம்.

இந்த பேரணி வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை சென்றடையும். அங்கு தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், நிலம் கொடுக்க தயாராக உள்ளவர்களும் ஆட்சியரிடம் மனுக்களை அளிப்பார்கள் என்றார் அவர்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு

3 comments:

ஜீவி said...

தாழ்த்தப்பட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
பொறியியல் படித்த இளைஞர்களுக்கு
முன்னுரிமை கொடுத்து, நிறுவ இருக்கிற ஆலையில் இன்ஜினியர்கள் வேலைக்கு இந்த சமயத்தில் வாய்ப்பளித்தால் அது ஒரு மிகச்சிறந்த முன் உதாரணமாக இருக்கும்.

வடுவூர் குமார் said...

வருகிற ஒன்றிரண்டு தொழிலதிபர்களையும் விரட்டிவிட்டால்,தமிழகத்தையும்,கேராளாவுடன் சேர்த்து பலர் ஒதுக்க அதிக வாய்புள்ளது.
எல்லாவித முன்னேற்றங்களிலும் சாதக பாதகங்கள் உள்ளன.நாளைய உலகுக்கு/மனிதனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தமிழகம் செயல்படவேண்டும்.
பிறருக்கு உள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
எனக்கென்னவோ,ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோனுகிறது.

Anonymous said...

டாடா-விடமிருந்து பணம் பெறுவதுதான் இவர்களின் குறிக்கோள். எதிர்ப்பவர்களுக்கு 1 கோடி கொடுக்கணுமாம். அப்பதான் அவர்கள் சம்மதிப்பார்களாம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...