.

Wednesday, August 22, 2007

மும்பையில் பதின்மவயது சிறுவன் கொலை


பதினாறு வயது அத்னன் பத்ரவாலாவின் கொலை மும்பைநகரையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று காணாமல்போன சிறுவனின் பெற்றோருக்கு ரூ.இரண்டு கோடி கேட்டு வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே அது ஒரு கடத்தல் முயற்சி எனத் தெரியவந்தது. அவன் 'ஆர்குட்' தளம் மூலம் அறிமுகமான நண்பர்களால் கடத்தப் பட்டதும் பின் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பீதியடைந்த பதின்மவயது குற்றவாளிகள் அவனைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் நேற்றும் இன்றும் ஊடகங்களில் பேரிடத்தை எடுத்துக் கொண்டுள்ளன. சமூக கூட்டமைப்பு தளங்களான ஆர்கூட், மைஸ்பேஸ், ஃபேஸ்புக் முதலியவற்றின் தாக்கம் குறித்து பல விவாதங்கள் நடத்தப் படுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் 28 வயதான சுஜித் நாயர்தான் இச்சதியின் இயக்குவிசையென காவலர்கள் கருதுகின்றனர். முன்னாள் BPO ஊழியரான இவர் கடந்த ஒரு வருடமாக வேலை ஏதும் இன்றி இருந்திருக்கிறார். பிணைப்பணத்துடன் துபாய்க்கு தப்பியோட திட்டமிட்டிருந்தார்.ஆனால் பதின்ம வயது கூட்டாளிகள் பயந்து அத்னனுக்கு தூக்கமாத்திரைகளைக் கலந்து மது கொடுத்து பின்னர் கழுத்து நெரித்து கொன்றுள்ளனர்.

ஆனால் இரு சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் மக்கள் தவறிழைக்க வாய்ப்பேயில்லை என ஊடகங்களில் கூறிவருகிறார்கள். சிலமாதங்கள் முன் பதின்ம வயது சிறுவன் கையில் ஸ்கோடா காரைக் கொடுத்து நடைபாதை மக்களை வதம்செய்த மும்பையில் பொறுப்பற்ற பெற்றொர்களின் மற்றுமொரு அத்தியாயமே இது.
NDTV.com: New angle emerges in Adnan murder case

DNA - Mumbai - Adnan murder: 3 sent to cop custody - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...