.

Wednesday, August 22, 2007

"மத்திய அரசு கவிழாது" - கருணாநிதி பேச்சு.

மத்திய அரசு கவிழாது என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடக் கூறினார். மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் கவிழாது என்று ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.

கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:

"இது அரசு விழா, நிச்சயமாக அரசு விழா அதை பன்மையில் புரிந்துகொள்ளுங்கள். மாநில அரசும், மத்திய அரசும் விழாது -என்பதே அதன் பொருள்."

எனக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் இருந்தபோதிலும், அவரைப் பற்றி நானும் என்னைப் பற்றி அவரும் கடுமையாக விமர்சித்தபோதிலும் ஒருவரை ஒருவர் மதிக்கும் போக்கு இருவரிடமும் இருந்தது.

இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரும் வெளிப்படுத்தியுள்ளார். இன்றளவும் நான் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகிறேன்.

1955-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று ஜீவானந்தம் வலியுறுத்திப் பேசினார். அவரது கருத்தை வலியுறுத்தித்தான் தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக கொண்டுவர அரசு முயற்சிகள் எடுக்கும் என்று கடந்த ஜனவரி 27-ம் தேதி சட்டப்பேரவையில் குறிப்பிட்டேன்.

மத்திய அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இங்கே பலரும் குறிப்பிட்டார்கள். அத்தகைய நெருக்கடியை நாம் ஒற்றுமை மூலம் வென்று காட்டுவோம்.

அதுவும் முடியவில்லை என்றால் ஜீவா குறிப்பிடுவதைப்போல ஜனசக்தியைத் திரட்டி வெல்வோம் என்றார் கருணாநிதி.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...