.

Thursday, August 9, 2007

ராமேசுவரம் விழா: மக்களைத் தொல்லைப் படுத்தாதீர் - இந்து இயக்கங்கள் கோரிக்கை நிறைவேறியது

ராமேசுவரத்தில் மக்களைத் தொல்லைப்படுத்தாமல் ரயில் சேவைத் தொடக்க விழாவை நடத்த வேண்டும் என்று இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விநாயகர் முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினமான வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள ரயில் சேவைத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கலந்து கொள்வதால் மக்கள் கெடுபிடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆடி அமாவாசையன்று ராமேசுவரத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ராமேசுவரத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் உட்பட அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு இந்த சோதனை நடவடிக்கை பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

விழா இடத்தை மாற்றலாம்: இதனால், ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக இறைவனை தரிசிக்க வசதியாக, விழா நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்கலாம் என இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு, முன்னதாக சில கிலோ மீட்டர் தொலைவில் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் இருந்து, விடியோ கான்பரசிங் முறை மூலம் தினசரி ரயில் சேவையை முதல்வரும், சோனியாவும் தொடங்கி வைக்கின்றனர்.

இதற்குப் பதிலாக, முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்தும், சோனியா தில்லி அல்லது சென்னையில் இருந்தோ விடியோ கான்பரசிங் முறை மூலம் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கலாம். எப்படியும் விடியோ கான்பரசிங் முறை மூலம் தான் விழா நடைபெறப் போகிறது. அதை எங்கு இருந்து செய்தால் என்ன என்று குறிப்பிட்டார் விநாயகர் முரளி.

இந்த விண்ணப்பத்தை ஏற்று சற்றுமுன் விழாவை மதுரைக்கு மாற்றிவிட்டார்கள்.

தினமணி

The Hindu News :: Hindu outfit to hold black flag demo during Sonia's visit
Chennai Online News Service - View News :: Sonia to inaugurate rly line in TN

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...