.

Thursday, August 9, 2007

டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆடெக்ஸ் இந்தியா சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஜனவரி-மே 2007 காலகட்டத்தில் மட்டும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே காலக்கட்டத்தில்தான் சுமார் 255 புதிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் முதன் முதலாக தொலைகாட்சி விளம்பரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த விளம்பரத் துறையில் சில்லரை விற்பனை நிறுவனங்களின் பங்களிப்பு 1 சதவீதம் மட்டுமே என்று கூறுகிறது ஆடெக்ஸ் ஆய்வு.

குறிப்பாக 60 பெரிய வர்த்தக நிறுவனங்கள் தென் இந்திய தொலைக்காட்சி சேனல்களிலேயே விளம்பரம் கொடுத்து வருவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டு ஜனவரி-மே காலகட்டத்திற்கிடையே நாளொன்றுக்கு ஒளிபரப்பாகும் மொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 45,000. இதில் ஒரு நாளைக்கு 700 விளம்பரங்கள் வீதம் வந்துள்ளதாக அந்த ஆய்வுக்குறிப்பு கூறியுள்ளது.

விளம்பர வருமானத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் பொழுதுபோக்கு சேனல்களுக்கே கிடைக்கிறது. சில அரிய வேளைகளில் சில்லறை விற்பனையாளர்கள் இசை சேனல்களிலும் விளம்பரங்கள் அளிப்பதாக ஆடெக்ஸ் ஆய்வு கூறுகிறது.

தமிழ் எம்.எஸ்.என்.

Retailers increase ad spend on TV :: Economic Times
Indiantelevision.com > AdEx India Analysis > Snapshot on TV Advertising in first half of 2007 - Part 1
Social Advertisements on TV in H1 2007

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...