.

Saturday, February 17, 2007

சாகரன் உடல் தகனம்

சாகரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. அவரது முதிர்ந்த தந்தையார் இறுதிச் சடங்குகளை நடத்த அவரது உடல் மின்மயானத்தில் சரியாக 3.55க்கு தகனம் செய்யப் பட்டது.

வலைப்பதிவர் கவிஞர் பாலபாரதியால் தமிழ்மணத்தின் சார்பாக மலர்வளையம் சார்த்தப் பட்டது. மேலும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக தேன்கூடு தந்த சாகரனுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினார்.

பதிவர்கள் மா.சிவகுமார், லக்கிலுக் ஆகியோர் அவருடன் மின் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பதிவர் இகாரஸ் பிரகாஷ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சாகரன் பங்கேற்றிருந்த முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல வலைப்பதிவு அன்பர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், அலுவலக தோழர்கள், உறவினர்களின் துயர அஞ்சலியுடன் அவரது இறுதிப் பயணம் நிறைவுற்றது

9 comments:

நாகராஜ் said...

நாங்களும் நேரில் கலந்து கொண்டோம்

சோகமே உருவான வீட்டில்
அவர் குழந்தையை பார்த்ததும் நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது, காலன் மிகக் கொடியவன்.

அற்புதமான மனிதரை இழந்து தவிக்கும் குடும்ப அன்பர்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று தெரியவில்லை அன்பரே

கலங்கிய மனதுடன்

Sri Rangan said...

"......................"

வருந்துகிறோம்.இந்த இழப்பும் எம்மை வருந்த வைக்கிறது.அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம்.

மலை நாடனின் ஒலித் தொகுப்பு நெஞ்சை உருக்குகிறது.உலகமெல்லாம் வலைப் பதிவைப் பார்க்கும் தமிழ் பேசும் அன்பர்கள் அந்த ஒலித் தொகுப்பினூடாகச் சாகரனின் பரிணாமங்களை அறிய முடிகிறது.இந்த இழப்பை பாரிய இழப்பாக அறிகிறேன்.

உங்கள் எல்லோடும் இணைந்து நானும் அஞ்சலிக்கின்றேன்.

Sri Rangan said...

"......................"

வருந்துகிறோம்.இந்த இழப்பும் எம்மை வருந்த வைக்கிறது.அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்து அனுதாபம்.

மலை நாடனின் ஒலித் தொகுப்பு நெஞ்சை உருக்குகிறது.உலகமெல்லாம் வலைப் பதிவைப் பார்க்கும் தமிழ் பேசும் அன்பர்கள் அந்த ஒலித் தொகுப்பினூடாகச் சாகரனின் பரிணாமங்களை அறிய முடிகிறது.இந்த இழப்பை பாரிய இழப்பாக அறிகிறேன்.

உங்கள் எல்லோரோடும் இணைந்து நானும் அஞ்சலிக்கின்றேன்.

சென்ஷி said...

மனதை கனக்க செய்யும் நிகழ்வு...

துயரங்களுடன்

சென்ஷி

Anonymous said...

மிகவும் கவலையாக இருக்கிறது. தமிழ்மணம் சார்பாக மலர்வளையம்/கொத்து, மற்றும் மாலை வைத்து, நண்பர் இறுதி அஞ்சலி செலுத்தியதை நானும் பார்த்தேன். அவர் கண்கள் கலங்கியிருந்ததை காணமுடிந்தது. துக்க இடத்தில் பேச முடியாத காரணத்தால், அவரிடம் நான் பேசவில்லை..

சாகரன், நல்ல நண்பர், தமிழுக்கு நிறைய செய்தவர்.அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.

நட்புடன்
சுதாகர்

Anonymous said...

ஆம் விவரங்களை என்னிடம் தொலைபேசியில் கூறிய பாலாவுக்கும் சரி கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் சரி இதயம் வெடித்துக் கொண்டிருந்தது...

சாகரனின் மறைவால் வருந்தும் ஆயிரக்கண்கான தமிழ் வலைப்பதிவர்களுக்கு தகவலை கொண்டு சேர்க்க வேண்டியே அத்தனை சோகங்களிடையேயும் இதுவரை பதிவுகள் இட்டு வந்தோம்..

enRenRum-anbudan.BALA said...

வலைப்பதிவர் அனைவரையுமே மிகவும் துயரம் கொள்ள வைத்து விட்டது, சாகரனின் திடீர் மரணம், அவருக்கு என் அஞ்சலி.

Sumathi. said...

ஆமாம் கடவுள் மிக மிக கொடியவன் தான். எல்லாராலும் பெரிதும் விரும்ப கூடியவரைத் தான் மிக விரைவிலேயே தானும் அழைத்துக் கொள்கிறான்.என்ன ஒரு கல் நெஞ்சுகாரன்.

எனக்கு அவரை பெரிதாக தெரியவில்லையென்றாலும் மற்றவர்களின் எழுத்து மூலம் அறிந்து கொண்டேன்.இது தேன்கூட்டிற்கும் தமிழ்மணத்திற்கும் ஒரு மிகப் பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பே.
கலங்கும் மனதுடன்

thiru said...

மனதை பாதிக்கும் ஒரு இழப்பு. மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது துணைவி, குழந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஆறுதலும், மனபலமும் பெறட்டும் :((

-o❢o-

b r e a k i n g   n e w s...