.

Saturday, February 17, 2007

ஹட்ச் நிறுவனத்தை கையகப்படுத்தும் வோடபோன் தலைமை அதிகாரி பிரதமருடன் சந்திப்பு

பிரட்டனை சேர்ந்த வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி அருண் சரின் பிரதமர் மன் மோகன் சிங்கை தில்லியில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தில், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் நிறுவனத்துக்குச் சொந்தமான பெரும்பான்மை (67 சதவீத) பங்குகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் வோடபோன் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அருண் சரின், லண்டன் புறப்படுவதற்கு முன்னர் வெள்ளிகிழமை காலை பிரதமரை சந்தித்தார். அப்போது அவர் ஹட்ச்-எஸ்ஸார் சேவையை கிராமப்புறங்களுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை வெளியிட்டார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தின் 33 சதவீதப் பங்குகளை கையில் வைத்துள்ள எஸ்ஸார் நிறுவனத்துடன் கூட்டு தொடரும் என பிரதமரிடம் நம்பிக்கை தெரிவித்தார் அருண் சரின்.

10 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமாக ஹட்ச்-எஸ்ஸாரை வளர்த்தெடுக்க, இன்னும் சில ஆண்டுகளில் வோடபோன் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அருண் சரின் ஏற்கெனவே கூறியிருந்தார். இவர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...