நேற்றைய அரசு கலைப்பு அச்சங்கள் தேர்தல் ஆணையரின் அறிவிப்பால் விலகியபோதும் சமாஜ்வாடி கட்சியின் அச்சங்கள் இன்னும் முழுவதும் தீரவில்லை.
உ.பியில் சட்டசபை 2002 வருடம் பிப்ரவரி 25 அன்று அமைக்கப்பட்டது. ஆனால் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததினால் புதிய அரசு அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டது. 'தற்காலிக விலக்கலில்' (suspended animation)் இருந்த அவை மே 14 அன்றே முதல் கூட்டத்திற்கு அமர்ந்தது. தேர்தல் ஆனையம் இதனைக் கருத்தில் கொண்டே மே 14க்குள் அடுத்த அவை கூடும்படியாக தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் பிப்.25யுடன் அவையின் ஆயுட்காலம் முடிகிறது என்று அவையை கலைத்து, முலாயம்சிங் தன் பெரும்பான்மையை காட்டவிடாமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால் சமாஜ்வாடியின் அமர்சிங் இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்திருக்கிறார் என்கிறது செய்தி.
Friday, February 23, 2007
உ.பியில் சட்டசபை கலைக்கப் படும் ?
Labels:
இந்தியா
Posted by மணியன் at 1:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment