.

Thursday, February 22, 2007

ஆப்பிரிக்காவை விட இந்தியகுழந்தைகள் நிலை பரிதாபம்







மூன்று வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை நடத்தின. இதில் 46 சதவீத இந்திய குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா போன்ற வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட 35 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளே சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் தாய்மார்களின் அறியாமை மற்றும் சுகாதாரச் சேவைகளில் உள்ள குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது என்கிறார் யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மார்சியோ பேபில்லி.

Dominican Today , தினகரன் ,

3 comments:

சிவபாலன் said...

இந்திய அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? உண்மையில் இதை படிக்கும் போது அதிர்ச்சியளிக்கிறது. கிட்டதட்ட குழந்தைகளில் பாதி பேர் பற்றா குறையான உணவு உட்கொள்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இவர்கள் எதிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். இது அரசுக்கும் சமூகத்திற்கும் மிகப் பெரிய சவாலாய் இருக்கும்.. ம்ம்ம்ம்

ஆதிபகவன் said...

//ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது //

குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியாதான்.

நாம் என்றுமே நாட்டின் எதிகாலத்தைப் பற்றியோ எதிர்கால சந்ததியினரைப் பற்றியோ கவலைப்பட்டதில்லை.

சிவபாலன் said...

ஆதிபகவன்,

உண்மைதான். குழந்தை தொழிளாலர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்வி குறிதான். அடுத்த தலைமுறை இதனால் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரும்.

இனிமேலாவது எதிர்கால சிந்தனையுடன் செயல்கள் இருந்தால் நலம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...