.

Saturday, February 24, 2007

மைனர் பெண் காதலனுடன் செல்வது குற்றமல்ல!!

டெல்லியைச் சேர்ந்த 17 வயது பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். அந்த பெண்ணை பெற்றோர் மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தனர். வீட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.என்.திங்ரா தீர்ப்பில் கூறியதாவது:


18 வயதுக்கும் குறைந்த மைனர் பெண், எந்த ஆண் மீதும் காதல் வயப்படக் கூடாது, அவரையே கல்யாணம் செய்ய விரும்பக் கூடாது என்று இந்திய தண்டனைச் சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ கூறப்படவில்லை. அது ஒரு குற்றமும் இல்லை.


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலிக்கும் பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்த பாதுகாப்பும் கிடையாது. அவள் அங்கு பாதுகாப்பாக இருப்பாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.



New Kerela, தமிழ் முரசு

8 comments:

சிவபாலன் said...

உண்மையில் இந்த் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. 18 வயது நிறம்பாத பெண் சுயமாக சிந்தித்து வாழ்க்கையின் முக்கியமான செய்லை முடிவெடுக்க முடியுமா?

அந்த அளவுக்கு அந்த வயது பெண்கள் சிந்திக்கிறார்களா?

ஒன்றுமே புரியவில்லை.. ம்ம்ம்ம்

Anonymous said...

செய்தித்தாள்களில் வரும் செய்திகள் சில சமயங்களில் தவறான ஒரு கருத்திற்கு உங்களை இட்டுச் செல்லலாம். இதுவும் அது போல ஒன்றுதான்.

நீதிமன்றங்கள் தினசரி சந்திக்கும் வழ்க்குதான் இது போன்ற காதல் பிரச்னைகள். 18 என்ன? இங்கு வரும் சில பெண்களைப் பார்த்தால் 15,16 வயதுதான் இருக்கும்.

குற்றம் என்பது, மைனர் பெண்ணை அழைத்துச் செல்வது அவளது சம்மதமிருப்பினும் kidnapping என்ற வகையிலான கடுமையான குற்றம். எனவே உங்கள் செய்தினை படித்த தைரியத்தில் யாராவது இந்த குற்றத்தினை செய்து விடாமல் எச்சரிக்கவே இந்த பதில்:-)

சிவபாலன் said...

பிரபு ராஜதுரை சார்,

நல்ல படியாக வந்து எச்சரித்தீர்கள். மிக்க நன்றி...

ஆனால் அந்த தீர்ப்பில் ஏன் அவ்வாறு அந்த நீதிபதி அவ்வாறு கூறினார்.



சார், இந்த சுட்டியும் பாருங்க.. எனக்கு ஒன்னுமே புரியவில்லை

http://www.centralchronicle.com/20060328/2803002.htm

Central Chronicle
Tuesday March 28, 2006

//The Delhi High Court had ruled that the marriage of a minor girl above 15 years of age is not illegal if it is of her free will and that she cannot be sent to 'Nari Niketan' against her will in such cases //


சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மங்கை said...

சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு பக்குவம் இருக்கலாம் எனு எடுத்துக்கொண்டாலும், இதை படிக்கும் (அதாவது, தீர்ப்பை)மற்றவர்களுக்கு அதே பக்குவம் இருக்குமா என்று தெரியவில்லை...இந்த வயதில் வரும் காதல் ஒரு விதமான குருட்டு தைரியத்தை குடிக்கலாம்... மேலும் பிரவு ராஜதுரை சொன்னது போல் சிலர் இதை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது..

ஒரு முடிவுக்கு வர முடியாத ஒரு தீர்ப்பு

சிவபாலன் said...

மங்கை,

நீங்க சொல்வது சரி. ஒரு முடிவுக்கு வர முடியாத தீர்ப்பு!

என்னமோ போங்க..

வருகைக்கு மிக்க நன்றி

Anonymous said...

இப்படி ஓடிபோன எத்தனையோ பெண்கள் ரெட் லைட் ஏரியாவில் இருக்கின்றனர் என்பதை அந்த நீதிபதிக்கு தெரியுமா?ஒருவேளை அவரின் சொந்த மகளே இப்படி செய்தால்,அந்த நீதிபதி இந்த தீர்ப்பை வழங்குவாரா?

Anonymous said...

எனக்கு சுருக்கமாக இரண்டு வரிகளில் எனது கருத்தினை கூறும் கலை கை வரவில்லை போல. அதாவது, இந்து திருமண சட்டப்படி மைனர் என்ன குழந்தை திருமணம் கூட செல்லும்...ஆனால், மைனர் பெண்ணை அவளது பாதுகாவலர் கட்டுப்பாட்டிலிருந்து கடத்துவது குற்றம். அது போல குழந்தைகளுக்கு திருமணம் செய்வித்தலும் குற்றம்.

சிவபாலன் said...

பிரபு ராஜதுரை சார்,


Now I got it ! :)

Thanks

வருகைக்கு நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...