.

Saturday, February 24, 2007

ஏழைகளை பாதிக்காமல் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் : அப்துல் கலாம் வாக்குறுதி

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய முக்கிய துளிகள்:

பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட் கள் தாராளமாக கிடைக்கும் முயற்சி எடுக் கப்பட்டு வருகிறது

கடந்த மூன்று ஆண்டுகளாக எட்டு சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம், நடப்பு ஆண்டில் ஒன்பது சதவீதமாக உயரவுள்ளது. 11வது ஐந் தாண்டு திட்டத்தின்படி, ஒன்பது சதவீத வளர்ச்சி வீதத்தை எட்டு வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

வளர்ச்சி மற்றும் முதலீடு வேகமாக அதிகரிப்பதும், நாட்டின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத் துறையை மீட்டெடுப்பது, வேலை வாய்ப்பு முறையை புதிய வடிவத்திற்கு மாற்றி அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஏழைகளுக்கு தேவையான முக்கிய சேவைகளை அளித்தல், உற்பத்தி துறையில் போட்டியை உருவாக்குதல், மனித வளத்தை அதிகரித்தல், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், நிர்வாக மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமே விரிவுபடுத்துவது என்றும், இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டில் கூடுதல் மாவட் டங்களில் விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அறிவியல் மையம், இந்திய தொழில் நுட்பக் கழகம், இந்திய தகவல் தொழில் நுட்ப மையம் ஆகிவற்றை கூடுதல் எண்ணிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப் படும். வடகிழக்கு பகுதிகளில் புதிய மத்திய பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்படும். விவசாயத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாது, சாகுபடியை மேம்படுத்த புதிய தொழில் நுட் பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

.சிறுபான்மை சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் அவர்களுக்கென புதிய திட்டங்களை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும். கோல்கட்டா, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றிலுள்ள மையங்களை ஒருங்கிணைக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். கோதாவரி மற்றும் மகா நதி ஆகியவற்றை உள்நாட்டு நதிநீர் வழிகளாக அறிவிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக இந்த 2007ம் ஆண்டை "அகன்ற அலைவரிசை' ஆண்டாகக் கருதப்படும். தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மின்னணு நிர்வாகம் மூலமாக மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மறுசீரமைப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்படும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் நிலை குறித்து ஆய்வு நடத்திய சச்சார் கமிட்டி அறிக்கை மீது பார்லிமென்ட்டில் விவாதம் நடத்தப்படும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒருங்கிணைந்த உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்படும். மக்களுடன் நட்புறவுடன் பழகும் வகையில் உள்ளூர் கோர்ட்டுகள் அமைக்க, "கிராமீன் நியாயாலயா மசோதா' அறிமுகப்படுத்தப் படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் துவக்கப்படும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...