முலாயம்சிங்யாதவ் மனு மீதான விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி எ.ஆர்.லட்சுமணன் அறிவிப்பு
புதுடில்லி: முலாயம்சிங்யாதவ் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது. இதற்கு, சி.பி.ஐ., மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் தனது வழக்கை ஐகோர்ட் நீதிபதி கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறி முலாயம்சிங்யாதவ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி எ.ஆர்.லட்சுமணன் விசாரிப்பதாக இருந்தது. இந்நிலையில், தனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், எனவே தான் இந்த மனு மீதான விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி எ.ஆர்.லட்சுமணன் அறிவித்தார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
source: தினமலர்
Friday, March 16, 2007
மிரட்டல்: முலாயம் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்.
Labels:
அரசியல்,
இந்தியா,
சட்டம் - நீதி
Posted by ✪சிந்தாநதி at 3:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment