.

Sunday, March 18, 2007

ஜெயலலிதா ஆவேசம்


காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கோரி ஜெயலலிதா இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் ஆயிரக்கணக் கானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். காவிரி பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளை மக்கள் தூக்கியெறிவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியிருக்கிறார். விரைவில் தேர்தல் வரும் என்று கூறிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் அதிமுக வினரின் ஆதரவுடன் கூடிய ஆட்சியும் அமையும் என்றும் அவர் கூறினார்.


மாலைச் சுடர்

2 comments:

Anonymous said...

ஏற்கனவே வயித்தெரிச்சல், பசி வேற வயித்தக்கொடையும். அதில அவ உளறுகிறார். இதெல்லாத்தையும் கண்டுக்காத சார்

புள்ளிராஜா

கோவி.கண்ணன் said...

//"ஜெயலலிதா ஆவேசம்" //

உண்ணாவிரதம் என்றதும் எல்லோரும் ஆ! வேசம் என்கிறார்கள் !
:)

-o❢o-

b r e a k i n g   n e w s...