.

Monday, April 9, 2007

ராஜ்நாத் சிங், அத்வானியை கைது செய்ய போலீசார் மறுப்பு.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை கைது செய்ய லக்னோ போலீசார் மறுத்து விட்டனர். அக்கட்சியின் பிரச்சார சிடி விவகாரத்தின் எதிரொலியாக இன்று ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்கள் இன்று தானாக முன்வந்து ஹஸ்ராத்காஞ்ச் காவல் நிலையத்தில் கைதாக முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்ய மறுத்தனர்.லக்னோவில் தானாக முன்வந்து கைதாக முற்பட்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, நக்வி மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்களும் சென்றிருந்தனர். இதுகுறித்து, டிஜிபி ஜி.எல்.ஷர்மா செய்தியாளர்களிம் கூறுகையில், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் இல்லை என்பதால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், தான் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

2 comments:

Anonymous said...

எது எப்படியோ நீதி சாகமல் இருந்தால் சரிதான்.

-விடுதலை முருகன்-

Anonymous said...

Either they should counter BJP's allegations in a public forum and then arrest them or show clinching evidence to the contrary to what the CD and the ad claims in National TV to embarass BJP.

By doing nothing and asking for banning a political party, the true intolerant fascist colors of Congress and communists are comming out in the open.

-o❢o-

b r e a k i n g   n e w s...