.

Monday, April 9, 2007

அரசியின் ஆலய தரிசனம்

இந்தியாவில் பிரபலமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்று பூரி ஜனன்நாதர் ஆலயம். ஒரிசா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. இன்று அந்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு முக்கிய நிகழ்வுக்காகக் கூடினார்கள்.

அதாவது, பூரியின் மகாராணியார் தனது வாழ் நாளில் அந்த ஆலயத்துக்கு பிரத்தியேகமாக ஒரு தடவைதான் விஜயம் செய்ய முடியுமாம். அந்த தினம் இன்று; அதற்காகத்தான் பக்தர்கள் எல்லாம் இன்று அங்கு கூடியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்துக்கு பல லட்சக் கணக்கான இந்துக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். ஆனால் பூரி ராஜகுடும்ப வழமைப் படி மகாராணியார், தனது வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரந்தான் அந்த ஆலயத்துக்குச் செல்ல முடியும்.

இந்த ஜகன்நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீற்றர்கள் தூரத்தில் உள்ள தனது மாளிகையில்தான், பூரியின் மகாராணியான லீலாவதி பட்டமஹாதேவி கடந்த மூன்று தசாப்தமாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இன்றுவரை அவர் அந்த ஆலயத்தில் காலடி வைத்தது கிடையாது.

மகாராணியும், பூரியின் மஹாராஜாவான கஜபதி திவ்யசிங் தேவ் அவர்களும், இன்று, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்யும் போது, அவர்களுடன் இந்தியாவெங்கிலும் இருந்து வந்த இரண்டு டஜன் அரச குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

கோயிலுக்குள் சென்றவுடன் மஹாராஜா ராணிக்கு ஒரு பட்டுச் சேலையைச் தலையைச் சுற்றிவிட, அதன் பின்னர் அங்கு ஒரு சிறுவயதான அர்ச்சகர் மற்றும் ஒரு திருமணமான பிராமண குலப் பெண் ஆகியோரின் உதவியுடன் மஹாராணியார் அங்கு விளக்கை ஏற்றி வழிபாடு செய்வார் என்று கோயில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பர்தா அணிந்த மஹாராணியின் இந்த விஜயத்தின் போது பொதுமக்கள் பார்வையில் அவர் படக் கூடாது என்பதற்காக, அவர் அங்கு விஜயம் செய்த 3 மணி நேரத்துக்கு, அந்த ஆலயம் பொதுமக்களுக்கு மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.

ஏனைய அர்ச்சகர்களுக்கும் அப்போது அங்கு அனுமதி கிடையாது.

கடைசி மஹாராணி ஜகன்னாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்தது 1966 ஆம் ஆண்டாம்.

BBC-Tamil

2 comments:

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப இண்டரஸ்டிங் விஷயமா இருக்கே. கொஞ்சம் பின்புலம், அதற்குண்டான கதைகள் எல்லாம் கிடைச்சா எடுத்துப் போடுங்க.

Anonymous said...

வித்தியாசமான நியுஸ். கொத்ஸ் சொன்னதுபோல கதைகள் தெரிந்துகொள்ள ஆவல்.

-o❢o-

b r e a k i n g   n e w s...