.

Sunday, April 8, 2007

ஜெயலலிதாவின் புத்தாண்டு விருப்பம் !

சென்னை:" இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்றால் சட்டம்ஒழுங்கை காக்க தவறிய தி.மு.க., அரசை கலைத்து விட்டு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்' என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதற்கு அத்தாட்சி. இதன் பிறகும் டி.ஜி.பி.,யை விட்டு பேட்டி கொடுக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. பொதுவாக போலீஸ் துறைக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வரே இது குறித்து பதில் அளிக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நான் தான் பதில் சொல்வேன். பல பிரச்னைகளுக்கு தலைமை செயலரை விட்டு அறிக்கை கொடுக்க வைக்கிறார். பதில் சொல்ல முடியாத அளவிற்கு தலைகுனிவு சம்பவங்கள் நடக்கின்றன.திண்டிவனம் அருகே குண்டு வெடித்த சம்பவத்தை "பயங்கரவாத சம்பவம் இல்லை. ஏதோ கல் உடைப்பதற்கு வெடி பொருட்கள் எடுத்துச் சென்றதாக' டி.ஜி.பி., சொல்கிறார். இவர் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை. வெடித்தவை சாதாரண கல் உடைக்கிற வெடி பொருட்களாக இருக்க முடியாது.

இது ஆர்.டி.எக்ஸ்., தான். போலீஸ் துறை சீரழிந்து போய்விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி என்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக 160 வாகனங்களை வழங்கியிருந்தேன். அந்த வாகனங்கள் எங்கே போனது? ரோந்து பணி ஒழுங்காக நடந்திருந்தால் அப்பாவி மக்களின் உயிர் பலியானதை தவிர்த்திருக்கலாம்.

கருணாநிதி பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கிறார். புகலிடம் மட்டுமல்ல சுதந்திரமாக அவர்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகிறார். இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்றால் சட்டம்ஒழுங்கை காக்கவும், நிலைநாட்டவும் தவறிய தி.மு.க., மைனாரிட்டி அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

செய்தி : தினமலர் (
03.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஜெயலலிதா கோரிக்கை)
தலைப்பு : கோவி.கண்ணன்

7 comments:

Anonymous said...

இது ஜெயலலிதாவின் புதுவருட விருப்பம் அல்ல டெய்லி விருப்பம் இதுதான், சில நாதாரிகள் பாதுகாப்பற்றமுறையில் ஜெலற்றின் குச்சிகளை கொண்டு போய் வெடிக்கவைத்துக்கெல்லாம் சட்டம் ஒழுங்கு சரி இல்லை ஆட்சியை கலை என்றால் இது என்னவிதமான விருப்பம்.

சிவபாலன் said...
This comment has been removed by the author.
சிவபாலன் said...

What ever she said, is certainly a cause of worry. We cannot neglect Jey's statement.

I do feel, we were more safe in Jey's rule. It is my personal opinion.

Let govt come out and accept some unwanted activities going on in TN. And they have to take appropriate actions to control them. And make us safe.

கோவி.கண்ணன் [GK] said...

//I do feel, we were more safe in Jey's rule. It is my personal opinion.//

ம் அந்த அம்மா பத்திரிக்கைக் காரன் என்று கூட பார்க்காமல் நக்கீரன் கோபலை தீவிரவாத ஆதரவாளர் என்று கூறி தனக்கு பிடிக்காதவரை பொடாவிலும் போடும் ! அந்த அளவுக்கு safe !
:)

சிவபாலன் said...

இல்லை GK, நீங்க பொடாவை வைத்து ஜெ ஆட்சியில் பாதுகாப்பை நிர்ணியக்க முடியாது.

அதற்கு பல காரணிகள் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

VSK said...

தமிழகத்தில் இன்று, இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசும்போது, அதைப் பற்றிய கவலையே இல்லாமல், அரசு பொறுப்பேற்காமல், மக்களின் பயத்தைப் போக்க முனையாமல் மெத்தனமாக இருப்பதும்,
அதைக் குறித்து எழுப்பும் கேள்விக்கு அவர் மட்டும் என்ன கிழித்தார் என்ற தொனியில் மறுமொழியிடுவதும் நமக்குப் புதிய விஷயங்கள் இல்லையே.

:))

ரவிசங்கர் said...

இந்த இடுகைக்கு - ஜெயலலிதாவின் புத்தாண்டு விருப்பம் - என்று கவர்ச்சித் தலைப்புத் தேவை இல்லையென்று தோன்றுகிறது. செய்தியையே தலைப்பாகத் தந்தால் சற்றுமுன் தலைப்புகள், செய்திகள் கூடுதல் நம்பகத்தன்மை பெறும் என்று தோன்றுகிறது

-o❢o-

b r e a k i n g   n e w s...