.

Sunday, April 8, 2007

ஜார்க்கண்டில் 300 நக்சல்கள் திடீர் தாக்குதல்: 2 ஜவான்கள் உள்பட 6 பேர் சாவு; பாலம் தகர்ப்பு

ராஞ்சி, ஏப். 8: ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டத்தில் சுமார் 300 நக்சல் தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜவான்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர்.

பொக்காரோ மாவட்டத்தில் உள்ள காஸ்மஹால் நிலக்கரி சுரங்கப் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் உள்ளிட்ட 300 நக்சல் தீவிரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

பின்னர் குர்பானியா பஜாரில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் போலீசார் உள்ளே வராமல் தடுக்க பில்பிலோ-குர்பானியா பாலத்தை கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். அதன் பின்னர் காந்தி நகர் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரும் திருப்பித் தாக்கினர். சனிக்கிழமை அதிகாலை வரை இந்த சண்டை நீடித்தது. இதில் 4 போலீசார் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களைத் தூக்கிக்கொண்டு தீவிரவாதிகள் தப்பினர்.

தீவிரவாதிகள் ஜவான்களிடமிருந்து 4 தானியங்கி துப்பாக்கிகளை பறித்துச் சென்றனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...