.

Saturday, April 7, 2007

இந்திய கிரிக்கட் அணியின் தலைவராக திராவிட் தொடருவார்

மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இருந்து இந்தியா முன்னதாகவே வெளியேற நேர்ந்த போதிலும், இந்திய அணியின் தலைவராக ராகுல் திராவிட் தொடர்ந்தும் இருப்பார் என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

தேசிய அணியின் விளையாட்டுத் திறனையும் மற்றும் உள்ளூர் விளையாட்டையும் முன்னேற்றுவதற்கான வழி வகைகள் குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பாயில் கூடி ஆராய்ந்தது.

பதற்றப்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்ற சமிக்ஞையை வெளிக்காட்டுவதற்காகவே, ராகுல் திராவிட்டை தொடர்ந்தும் அணித் தலைவராக வைத்திருக்க கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் போட்டிகளில் தற்காலிக பயிற்சியாளரான ரவி சாஸ்திரியுடன் இணைந்து டிராவிட் செயற்படுவார்.

பிபிசி-தமிழ்

1 comment:

Anonymous said...

சௌத் ஆப்ரிக்கா 6 விக்கட்ட விட்டுட்டு அம்போன்னு நிக்குதே இதைப்பத்தி சற்றுமுன் ல எழுதமாட்டீங்களா ?

-o❢o-

b r e a k i n g   n e w s...